31 Aug 2022

அக்கினி பிரவேசம்

அக்கினி பிரவேசம்

திடீரென முளைத்து விடும் காளானைப் போல

சண்டையொன்று முளைத்து விடும் போது

பாவம் டீக்கடைக்காரர்

எத்தனை கிளாஸ்கள் உடையுமோ

பாட்டில்கள் எத்தனை மீதமாகுமோ

பண்டங்களைச் சிதறாமல் பாதுகாக்க வேண்டுமோ

அக்கினி குஞ்சொன்றை

ஆத்திரத்தில் யாராவது கைப்பற்றி விட்டால்

வெந்து தணிந்தது டீக்கடை என்று

டீக்கடைக்காரர் தகிடத்தத்தோம் போட வேண்டியதுதான்

அரசியல் பேசாதீர் என்று எழுதிதான் வைத்திருக்கிறார்

அதைப் படிப்பார் யார்

பெஞ்சுப் பலகையோ பலகை பெஞ்சோ

அதில் போட்டிருக்கும்

தினத்தந்தியை மட்டும் படித்து விட்டு

காசு கொடுக்காமல் கணக்கெழுதிக் குடித்த டீயில்

சுறுசுறுப்பு ஏற்றிக் கொண்டு

பாய்லர் நெருப்பினும் பெருஞ்சூட்டுக்

கோபக்கனல் கொண்டு எரியூட்டியதில்

அன்று எரிந்து போனது

டீக்கடைக்காரரின் அக்கௌண்ட் நோட்டும்தான்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...