29 Aug 2022

உங்களுக்கே உங்களுக்கேயான நேரம்

உங்களுக்கே உங்களுக்கேயான அதிகாலை நேரம்

ஏன் காலையில் எழ வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். முக்கியமான காரணம் அந்த அதிகாலை நேரம் நம் கையில் இருப்பது. யாராலும் பிடுங்கிக் கொள்ள முடியாதது.

அதிகாலை நேரத்தைத் தொடர்ந்து வரும் மற்ற நேரங்கள் நமக்கானவையாக இருப்பது அபூர்வம்.

அன்றாட வேலைகள், வழக்கமான கடமைகள், ஊதியத்திற்கான உழைப்பு, கட்டாயம் செய்து ஆக வேண்டிய பொறுப்புகள் என்று பலவற்றிற்கும் அதற்குப் பின்பான நேரத்தைப் பகிர்ந்து கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டியிருக்கும்.

குறிப்பாக அலைபேசி அழைப்புகள். எந்த நேரத்தில் எந்த அழைப்பு வரும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. அந்த அழைப்புகளுக்கு ஏற்றாற்போல் இயங்க வேண்டிய நிர்பந்தங்கள் உருவாகிக் கொண்டிருக்கும்.

ஒரு பணிக்காக இயங்க ஆரம்பித்து விட்டால் பிறகு அந்தப் பணி ஒரு முடிவுக்கு வரும் வரை நேரம் நம் கட்டுபாட்டுக்குள் வராது.

அதனால்தான் சொல்கிறேன், அதிகாலை நேரம் என்பது எந்தத் தொந்தரவுகளும் இல்லாத நமக்கேயான நேரமாகும்.

யாராலும் தொந்தரவு செய்ய முடியாத அந்த நேரத்தை நாம் உறங்கிக் கழிக்காமல் இருக்க வேண்டும். ஏனென்றால் அது போன்ற சுதந்திரமான நேரத்தை ஒரு நாளில் பிறகு வேறெப்போதும் உங்களால் பெற முடியாது.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...