31 Aug 2022

ஒரு சம்சாரியின் கதா

ஒரு சம்சாரியின் கதா

மகனால் ஒரு பிரச்சனையில்லை

மார்க் குறைவாக வாங்கி

அப்பாவின் மன உளைச்சலை அதிகரிக்க வேண்டாமென்று

அவனாகவே கையெழுத்துப் போட்டுக் கொள்கிறேன்

மனைவியாலும் ஒரு பிரச்சனையில்லை

அவளாகவே தெரியாமல் கடன் வாங்கி

அவளுக்கே தெரியாமல் அடைத்து விடுகிறாள்

அப்பாவும் அம்மாவும் சளைத்தவர்களா

அரசாங்க ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து

சுகருக்கும் பிரசருக்கும் மருந்து வாங்கிக் கொள்கிறார்கள்

அக்கம் பக்கத்தாலும் பிரச்சனையில்லை

கடன் கொடுப்பார்கள்

கொடுத்த கடனுக்கு

டிவியோ பிரிட்ஜோ மிக்ஸியோ டூவீலரோ

வேண்டியதை வேண்டும் போது தூக்கிக் கொள்கிறார்கள்

என்னால்தான் எப்போதும் பிரச்சனை

மேனேஜர் கையெழுத்தை ஒரிஜினலாகப் போட

இன்னும் வரவில்லை

இன்ஸ்டால்மெண்ட் வசூலிப்பவன் கண்ணில் படாமல்

ஒளியத் தெரியவில்லை

நான்கு கடைகள் ஏறி இறங்கி

கடைக்கு இரண்டென தூக்க மாத்திரைகள்

வாங்க வேண்டியதாக இருக்கிறது

பக்கத்துப் பக்கத்து டேபிள்களில் வாங்கிய கடனுக்கு

தலைமறைவாய் வாழ வேண்டியிருக்கிறது

குடும்பத்தில் இருப்போரின் சாமர்த்தியங்களில்

ஒருத்தரின் சாமர்த்தியமாவது

கொஞ்சம் கைகூடியிருக்கலாம் அல்லவா இந்தச் சம்சாரிக்கு

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...