30 Sept 2022

இலங்கையில் ஒலித்துக் கொண்டிருக்கும் அறத்தின் குரல்

இலங்கையில் ஒலித்துக் கொண்டிருக்கும் அறத்தின் குரல்

விடுதலைப் புலிகளை வெற்றிக் கொண்டதன் மூலமாக இலங்கையின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டதாக ராஜபக்ஷேக்களும் இலங்கை மக்களும் நினைத்திருக்கலாம்.

அறமற்ற முறையில் பெற்ற வெற்றியின் மூலமாக ராஜபக்ஷேக்கள் எழுதியிருந்தது மிக மோசமான அத்தியாயம் என்பதை காலம் இப்போது சொல்லி விட்டது.

காலத்திற்கு அறம் ஓர் அறங்காவலர். அறங்காவலர் நெறிப்படியே காலம் செல்கிறது. சீரழிவு அல்லது பேரழிவு மூலம் அறமற்ற தன்மைக்கான பிரதிவினையைக் காலம் முன்னெடுத்துச் செல்கிறது.

இலங்கையில் நிகழ்ந்திருப்பது வெறும் பொருளாதாரச் சீரழிவு மட்டுமல்ல. அறமற்ற ஆட்சிமுறைக்கும் நிர்வாக முறைக்கும் நேர்ந்திருக்கும் பேரழிவு. அவர்கள் தங்கள் ஆட்சி முறையையும் நிர்வாக முறையையும் அறம் சார்ந்த முறைமையோடு கட்டியெழுப்பும் போதுதான் பொருளாதாரச் சீரழிவையும் தடுத்து நிறுத்த முடியும்.

மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் துண்டாடும் அரசியல் போக்கு நெடுங்காலம் நீடிக்க முடியாது. அது அறமற்ற தன்மையின் மோசமான போக்கு.

மனிதர்கள் யாவரும் சமமானவர் என்னும் அறத்தின் குரலை இனவாதம் மற்றும் மதவாதம் பேசும் குரலால் மாற்ற முயன்றால் அதன் பின் விளைவுகள் எப்படி அமையும் என்பதைத்தான் இலங்கை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வதன் மூலமாக இலங்கை இன்னும் சில காலத்திற்குள்ளாக அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும் மீள முடியும். அதற்குத் தேவையானது அதற்கொப்ப அங்குள்ள அரசியல் நிர்வாக சட்ட முறைமைகளை மாற்றி அமைப்பதுதான்.

நாட்டிலுள்ள மக்கள் யாவருக்கும் சமமான சட்ட முறைகளை உருவாக்காமல் பாகுபாடான சட்ட முறைமைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து மீண்டும் இலங்கை தன்னை மீட்க முயற்சித்தால் அது மாபெரும் தொல்வியில் சென்றுதான் முடியும்.

இலங்கை தன் சீரழிவிலிருந்து சொல்லும் சேதி ஒன்றுதான். நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பாகுபாடின்றி அரவணைத்துச் செல்லுங்கள் என்பதுதான் அது சொல்லத் துடிக்கும் சேதி.

தங்கள் நாடு தங்களைப் பாகுபாடற்ற முறையில் அரவணைத்துச் செல்கிறது என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டால் தங்கள் நாட்டுக்காக மக்கள் எதைச் செய்யவும் தயாராக இருப்பார்கள். அப்போது சீரழிவிலிருந்து தங்கள் நாட்டை மீட்க தங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள். உயிர் கூட பெரிதில்லை எனும் போது தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி உழைக்கவும் அவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

அப்படி ஒரு முறை செய்து காப்பாற்றும் தலைவரைத்தான் இலங்கை எதிர்பார்க்கிறது. அப்படி ஒரு தலைமை இலங்கையில் உருவானால் அது இப்போதைக்கு மட்டுமல்லாது எப்போதைக்கும் நல்லது. இல்லையென்றால் அப்படியொரு தலைமையை உருவாக்கும் வரையிலும் மக்களும் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாததாகி விடும்.

இலங்கையின் போராட்டங்கள் உடனடியாக முடிவுக்கு வருவதும், தொடர்ந்து கொண்டிருப்பதும் ஆட்சி முறைமைகளிலும் நிர்வாக நடைமுறைகளிலும் செய்யும் மாற்றங்களில்தான் அடங்கியிருக்கிறது.

*****

ஸ்காட்லாந்து யார்டை விட மேலான தமிழகக் காவல்துறை

ஸ்காட்லாந்து யார்டை விட மேலான தமிழகக் காவல்துறை

1859 இல் தொடங்கப்பட்ட தமிழகக் காவல் துறைக்கு எத்தனையோ சிறப்புகள் இருக்கின்றன. ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரானது என்று சிறப்பு அவற்றில் ஒன்று.

அண்மையில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளை ஒன்றில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் சம்பந்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்து அவரையும் கைது செய்தது காவல்துறை.

கொள்ளையடிக்கப்பட்ட நகையில் மூன்றரைக் கிலோவை மறைத்து வைத்திருந்தார் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர். அதாவது, கொள்ளையடிக்கப்பட்ட நகையைக் கொள்ளையடித்து மறைத்து வைத்திருந்தார்.

இந்தக் கைது சம்பவங்கள் எல்லாம் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற ஒரு சில நாட்களுக்குள்ளாகவே கண்டுபிடிக்கப்பட்டு விரைவு தொடர்வண்டி செல்லும் வேகத்தில் விறுவிறுவென்று நிகழ்ந்தன.

இச்சம்பவங்கள் குறித்த தலைப்பு செய்திகளைத் தினம் தினம் பார்த்த போது எனக்கு திகிலான ஒரு வரிக்கதையைத் தினம் தினம் படிப்பதைப் போலிருந்தது.

காவலர்கள் திருடர்களைப் பிடிக்க வேண்டியிருக்கலாம். காவலரையே திருடராகப் பிடிக்க வேண்டியிருக்கிறதென்றால், அதுவும் காவல்துறைக்குள்ளே திருடர்களைக் கண்டுபிடிப்பது என்றால் அது சாதாரணமானதா என்ன? காவல் துறைக்குள் ஒரு காவல் துறை அமைத்து செய்ய வேண்டிய காரியம் இது.

காவல்துறையும் அப்படிதான் இயங்குகிறது. பொது காவல் துறை தனி. ரகசிய காவல் துறை தனி. லஞ்ச ஒழிப்பு காவல் துறை தனி. ஊழல் தடுப்பு காவல் துறை தனி. பொருளாதாரக் குற்றப்பிரிவு தனி. இணைய வழிக் குற்றங்கள் தொடர்பான காவல் துறை தனி.

காவல் துறையின் குற்றங்களுக்காக ஒரு காவல் துறை இயங்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.

காவல்துறை காவலரையேக் கைது செய்த போது தமிழகக் காவல் துறை ஸ்காட்லாந்து யார்டை விட ஒரு படி மேலானது என்று தோன்றியது எனக்கு.

***

27 Sept 2022

Two great assets

Two great assets

There are two great assets in the world. It is not related to money, jewelry, land, stocks, bonds, politics, power or influence. Both are concerned with man and man alone.

The first asset is health. The second property is mental health. It is enough to keep these two properties in good condition. All other properties are by-products of these two properties.

A Tamil Nadu proverb says that having too much money and not being healthy cannot be considered an asset.

In the same way, the Valluvar language of 'Mental health is human development' says that having too much money and not having mental health cannot be called an asset.

The body has an immune system that restores health when it is damaged by disease. There is also medicine.

If the physical health is damaged due to mental health, good feelings have the power to restore it.

No matter how great the disappointments, losses, or harms may be, staying in feeling goodwill is a natural way to preserve both physical and mental health.

Nature is endowed with the power of goodwill. It exhorts us to do the same. Nature is good enough to make trees grow again and again no matter how many trees humans cut down. No matter how much humans pollute the nature, nature is working with the good sense to clean it as much as possible.

Being in harmony with nature and being in nature are wonderful ways to protect our health and mental health.

You may ask how can we be reconciled after someone has cheated on us, betrayed us?

In villages, such conditions are met with a sentence of just leave us with that level. That sentence gives enormous releif.

No one is going to go looking for it and be fooled. We should always be tactful so that when someone deceives us, we have the knowledge to know that someone is cheating and to teach us a lesson so that we will not be deceived in the same way again.

We should be sympathetic to a traitor for letting us know that he is a traitor and stopping with that single betrayal.

No matter how you look at it, no matter how deeply you think about it, nature creates more opportunities for us to be at peace.

It is us who create feelings of revenge and feelings of punishment. Both these feelings are enough to destroy your physical and mental health.

The wealth you create by destroying your goodwill will only increase the number of cheaters and traitors against you. You too will rise in your sense of revenge and punishment. Why should you not have been a man of goodwill when all you longed for was the love of a man of goodwill, afflicted with an irreversible physical and mental disorder?

*****

இரண்டு மாபெரும் சொத்துகள்

இரண்டு மாபெரும் சொத்துகள்

உலகில் இரண்டு மிகப்பெரிய சொத்துகள் இருக்கின்றன. அது பணம் சம்பந்தப்பட்டதோ, நகை, நிலம், பங்குகள், பத்திரங்கள் சம்பந்தப்பட்டவையோ, அரசியல், அதிகாரம், செல்வாக்கு சம்பந்தப்பட்டவையோ அல்ல. இரண்டுமே மனிதரோடு, மனிதரோடு மட்டும் சம்பந்தப்பட்டவை.

முதல் சொத்து உடல்நலம். இரண்டாவது சொத்து மனநலம். இந்த இரண்டு சொத்துகளையும் நலத்தோடு வைத்திருந்தால் போதும். இதர சொத்துகள் அனைத்தும் இந்த இரண்டு சொத்துகளின் உப விளைவுதான்.

பணத்தை மிகையாக வைத்துக் கொண்டு உடல்நலமில்லாமல் இருப்பதைச் சொத்தென்று சொல்ல முடியாது என்பதைத்தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற தமிழகப் பழமொழி சொல்கிறது.

அதே போல பணத்தை மிகையாக வைத்துக் கொண்டு மனநலம் இல்லாமல் இருப்பதையும் சொத்தென்று சொல்ல முடியாது என்பதை ‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ என்ற வள்ளுவர் மொழி சொல்கிறது.

உடல்நலம் நோயால் கெடும் போது அதை மீட்டுக் கொண்டு வரும் எதிர்ப்பாற்றல் உடலுக்கு உண்டு. மருத்துவத்துக்கும் உண்டு.

மனநலத்தால் உடல் நலம் கெடுமானால் அதை மீட்டுக் கொண்டு வரும் ஆற்றல் நல்லுணர்வுகளுக்குத்தான் இருக்கிறது.

எவ்வளவு பெரிய ஏமாற்றங்களாக இருந்தாலும், இழப்புகளாக இருந்தாலும், பாதிப்புகளாக இருந்தாலும் நல்லுணர்வோடு இருப்பது உடல்நலம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டு சொத்துகளையும் காப்பாற்றிக் கொள்வதற்கான இயற்கையான வழிகள்.

இயற்கை நல்லுணர்வு எனும் ஆற்றலோடு இருக்கிறது. நம்மையும் அப்படி இருக்க அறிவுறுத்துகிறது. மனிதர்கள் எத்தனை மரங்களை வெட்டினாலும் மீண்டும் மீண்டும் மரங்களை முளைக்க வைக்கும் நல்லுணர்வுடன் இயற்கை இருக்கிறது. மனிதர்கள் எவ்வளவுதான் இயற்கையை மாசுபடுத்தினாலும் இயன்றவரை அவற்றையெல்லாம் தூய்மைப்படுத்தித் தரும் நல்லுணர்வுடன்தான் இயற்கை இயங்கி வருகிறது.

இயற்கையின் நல்லுணர்வோடு இயற்கையில் தோன்றிய நாமும் இருத்தல் நம்முடைய உடல்நலம் மற்றும் மனநலம் எனும் சொத்துகளைக் காத்துக் கொள்வதற்கான அற்புதமான வழிகள்.

நம்மை ஒருவர் ஏமாற்றிய பின், நமக்கு ஒருவர் துரோகம் செய்த பின் நாம் எப்படி நல்லுணர்வோடு இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.

கிராமங்களில் இது போன்ற நிலைமைகளை அசாத்தியமான ஒரு வாக்கியத்தோடு எதிர்கொள்வார்கள். ‘அந்த அளவோடு விட்டதே’ என்பதுதான் அந்த வாக்கியம்.

யாரும் தாமாகத் தேடிச் சென்று ஏமாறப் போவதில்லை. ஒருவர் நம்மை ஏமாற்றும் போது அவர் ஏமாற்றுவதை அறிந்து கொள்ளும் அறிவு இருப்பதற்காகவும் இனிமேல் அப்படி ஏமாறாமல் இருப்பதற்காகப் பாடம் கற்பித்ததற்காகவும் நாம் எப்போதும் நல்லுணர்வோடு இருக்க வேண்டும்.

ஒரு துரோகியிடமும் அவர் தம்மை ஒரு துரோகி என்று நமக்குத் தெரிய வைத்ததற்காகவும் அந்த ஒற்றைத் துரோகத்தோடு அவர் நிறுத்திக் கொண்டதற்காகவும் நாம் நல்லுணர்வோடு இருக்க வேண்டும்.

நீங்கள் எப்படிப் பார்த்தாலும், எவ்வளவு ஆழ்ந்து யோசித்தாலும் நாம் நல்லுணர்வோடு இருப்பதற்கான சந்தர்ப்பங்களையே இயற்கை அதிகம் உருவாக்கித் தருகிறது.

பழி வாங்கும் உணர்வுகளை உருவாக்கிக் கொள்வதும், தண்டிப்பதற்கான உணர்வுகளை உருவாக்கிக் கொள்வதும் நாம்தான். இந்த இரண்டு உணர்வுகளுமே போதும் உங்கள் உடல் நலத்தையும் மனநலத்தையும் அழிப்பதற்கு.

உங்கள் நல்லுணர்வுகளை அழித்து நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் சொத்துகள் உங்களுக்கு எதிரான ஏமாற்றுக்காரர்களையும் துரோகிகளையும் அதிகரித்துக் கொண்டே செல்லும். நீங்களும் உங்கள் பழி வாங்கும் உணர்விலும் தண்டிக்கும் உணர்விலும் உயர்ந்து கொண்டே போவீர்கள். முடிவில் மீள முடியாத உடல் கோளாறாலும் மனக்கோளாறாலும் பீடிக்கப்பட்டு நீங்கள் ஏங்குவது ஒரு நல்லுணர்வு கொண்ட மனிதரின் அன்புக்காகத்தான் எனும் போது நீங்கள் ஏன் நல்லுணர்வு கொண்ட ஒரு மனிதராகவே இருந்திருக்கக் கூடாது?

*****

26 Sept 2022

How do no - time conversations develop?

How do no - time conversations develop?

Lately I've been meeting a lot of people who tell me that they want to do the same thing as you, but don't have the time.

Why should someone act like me? That is absurd.

Every human being is unique. No one has to act like anyone else.

I am doing what I love. You too act in your own way. That is correct.

Next, they say there is no time. The truth is not interested or liked.

No one is ever so busy that they don't have time. They want to work on what interests them.

If you have a passion, you will put everything aside and devote your time to it.

Then they say why there is no time. When you see something, you want to be like it. At the same time, it is difficult to do it. Reluctance to do so.

How else can you say that? A more appropriate answer would be that there is no time.

This is how no-time conversations are born.

*****

நேரமில்லை என்ற உரையாடல்கள் எப்படி உருவாகின்றன?

நேரமில்லை என்ற உரையாடல்கள் எப்படி உருவாகின்றன?

உங்களைப் போன்று எனக்கும் செயல்பட ஆசைதான், ஆனால் நேரமில்லை என்று என்னிடம் சொல்பவர்களைச் சமீப காலமாக அதிகம் சந்தித்து வருகிறேன்.

ஒருவர் ஏன் என்னைப் போலச் செயல்பட வேண்டும்? அதுவே ஓர் அபத்தம்.

ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள். யாரும் யாரைப் போலவும் செயல்பட வேண்டியதில்லை.

நான் எனக்குப் பிடித்த வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்களும் உங்களுக்குப் பிடித்தமான வகையில் செயல்படுங்கள். அதுதான் சரியானது.

அடுத்ததாக நேரமில்லை என்கிறார்களே. ஆர்வமில்லை அல்லது பிடித்தமில்லை என்பதுதான் உண்மை.

நேரமில்லாத அளவுக்குப் பரபரப்பாக யாரும் இயங்க மாட்டார்கள். அவரவர்கள் அவரவருக்கு ஆர்வமானவற்றில் இயங்கவே விரும்புவார்கள்.

உங்களுக்கு ஆர்வம் இருந்தால் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அதற்குதான் உங்கள் நேரத்தைச் செலவிடுவீர்கள்.

பிறகு ஏன் நேரமில்லை என்கிறார்கள். ஒன்றைப் பார்க்கும் போது அதைப் போல ஆக வேண்டும் என்று ஆசை. அதே நேரத்தில் அதைச் செய்வது குறித்த மலைப்பு. முடியுமா என்ற தயக்கம்.

அப்போது வேறெப்படிச் சொல்ல முடியும்? அங்கே நேரமில்லை என்ற பதில்தான் பொருத்தமாக இருக்கும்.

இப்படித்தான் நேரமில்லை என்ற உரையாடல்கள் உருவாகின்றன.

*****

பாதுகாப்பு என்பது வெற்று முழக்கமல்ல

பாதுகாப்பு என்பது வெற்று முழக்கமல்ல

பைக்கால் இடித்தவர்

ஒரு சாரி சொல்லியிருக்கலாம்

கேட்டால் நான் ராங் சைடில் வந்ததாகச் சொல்கிறார்

ரைட் சைடில் வந்து இடித்து

சாரி சொல்லாமல் போனால்

அது ராங்க் சைடில் போவதாகாதா

என்னவோ டிராபிக் ரூல்ஸ் இருப்பதாகச் சொல்கிறார்

அரைப் புரிந்து கொள்வது சிரமம் என்பதால்

பக்கத்து வீட்டிற்குச் செல்வதென்றாலும்

ஆட்டோவில்தான் செல்கிறேன்

அவர் ராங் சைட் ரைட் சைட் என்று

எல்லா சைடுகளிலும் செல்கிறார்

பேமானி என்றாலும் சாவு கிராக்கி என்றாலும்

சிரித்துக் கொண்டே

கஸ்மாலம் டுபுக்கு போடாங் கொய்யாலே என்று

சட்ட ரீதியான வார்த்தைகளால் சமாளித்துக் கொள்கிறார்

சாலையில் பாதுகாப்பாகச் செல்வது

பாதுகாப்பாகச் செல்பவர்க்கு மட்டுமல்ல

பாதுகாப்பின்றிச் செல்பவருக்கும் பாதுகாப்பானது

புரிந்தவர்கள் பாதுகாப்பாகச் செல்லுங்கள்

புரியாதவர்களுக்கு ஆட்டோ டாக்சிதான் நல்லது

பாதுகாப்பையும் பாதுகாப்பின்மையையும் பயப்படாமல்

பலவிதமாக எதிர்கொள்ள அவர்களால்தான் முடியும்

கடல் போன்ற வெள்ளத்திலும்

வாகனங்களை லேண்ட் ரோவர் போல ஓட்டிச் செல்பவர்களை

நாம்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

பாதுகாப்பில் சமரசங்கள் கூடாது

அதுவும் நம் மக்கள் மத்தியில்

நம் ஒப்பந்தகாரர்கள் போட்டு வைத்த சாலைகளில் பயணிக்கையில்

*****

வாழ்த்து பிச்சையிட்டால் குறைந்தா போய் விடுவார்

வாழ்த்து பிச்சையிட்டால் குறைந்தா போய் விடுவார்

பிச்சைகாரர் கனக்கச்சிதமாக

பத்து ரூபாய் கேட்கிறார்

முன்னரே கொடுத்து வைத்தது போல

இன்று எத்தனை பேரைப் பார்த்து

எத்தனை பத்து ரூபாய்களுக்குக்

கணக்கு வைத்துள்ளாரோ

பத்து ரூபாய் கொடுத்து விட்டால்

மவராசனாய் இருப்பா என்பார்

கொடுக்கா விட்டால்

கட்டையில போறவனே என்பார்

பத்து ரூபாய் கொடுத்து

மவராசனாய் ஆனவர் எத்தனை பேரோ

கொடுக்காமல் போய்

கட்டையில் போனவர் எத்தனை பேரோ

நான் பார்க்கும் போது

பத்து ரூபாய் கொடுத்து விடுவதுண்டு

ஓர் அவசரம் என்றால்

இருபது ரூபாயாக வாங்கிக் கொள்வதுமுண்டு

எத்தனையோ பத்து ரூபாய்கள் கொடுத்திருக்கிறேன்

இருபது ரூபாய்கள் வாங்கியிருக்கிறேன்

ஒரு முறையாவது மவராசனாய் இரு என்று சொன்னால்

குறைந்தா போய் விடுவார் பிச்சைக்காரர்

*****

25 Sept 2022

வரலாற்றை ஆய்தலும் மக்களின் வாழ்வியலும்

வரலாற்றை ஆய்தலும் மக்களின் வாழ்வியலும்

அரசர்கள் புறாக்கள் வளர்த்திருக்கிறார்கள்

மக்கள் கோழிகள் வளர்த்திருக்கிறார்கள்

அரசர்களின் புறாக்கள் தூதிற்காக என்கிறார்கள்

மக்களின் கோழிகள் காலை கடிகாரம் போல என்கிறார்கள்

புறாக்களைக் கறிக்காகவும் வளர்த்திருக்கலாம்

கோழிகளையும்தான்

வரலாற்றை மறுகட்டுமானம் செய்து எழுதினால்தான்

உண்மை வெளியில் வரும்

இருண்டு கிடக்கும் வரலாற்றில்

டார்ச் லைட் அடிக்கும் போது

பேட்டரிகள் பல்பு வாங்காமல் இருக்க வேண்டும்

அது தவிர வரலாற்றில் இருண்ட காலம் ஒன்றுண்டு

என்று வேறு சொல்லி பயமுறுத்துகிறார்கள்

ஏதோ வளர்த்திருக்கிறார்கள் என்ற செய்தி போதுமானது

இன்றைய வரலாற்றைப் பிழையின்றி எழுத வேண்டும்

புறாக்களைப் பந்தயத்திற்காக வளர்க்கிறார்கள்

கோழிகளைக் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் வளர்க்கிறார்கள்

மக்கள் கோழிகளைக் கடைகளில் கறிகளாக வாங்கிக் கொள்கிறார்கள்

அது சரி அரசர்கள் எங்கே இருக்கிறார்கள் புறாக்கள் வளர்க்க

மக்களுக்கு எங்கே நேரமிருக்கிறது கோழி வளர்க்க

வீட்டுக்கொரு போன்சாய் மரம் வளர்த்தால் பெரிய விசயம்

*****

நாம் பார்க்காவிட்டால் நோட்டுகள் இல்லாமல் போய் விடுமா

நாம் பார்க்காவிட்டால் நோட்டுகள் இல்லாமல் போய் விடுமா

கல்லாப்பெட்டிப் பிரச்சனை தீர்ந்து விட்டது

கல்லாப்பெட்டி இருக்குமிடத்தில்

ஒரு ஸ்கேனிங் கோட் இருக்கிறது

ஸ்கேன் செய்து ரகசிய எண்ணைக் கொடுத்தால்

பணம் பரிமாறி விடுகிறது

கல்லாப் பெட்டியென்றால்

ஒவ்வொரு பைசாவுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும்

தனித்தனி டபராக்கள் அல்லது தனித்தனி அறைகள்

ரோக்காவைப் பார்த்து கொடுக்கும் பணத்தை வாங்கி

பக்கத்தில் ஒரு கால்குலேட்டரை வைத்து

அப்படி இப்படி அமுக்கி

அதுவும் போதாதென்று பக்கத்திலொரு பேப்பரில்

கூட்டிக் கழித்து சில்லரை கொடுத்து

இது பரவாயில்லை

பைசா துல்லியமாகப் பரிமாறி விட முடிகிறது

என்ன ஒன்று

பத்து ரூபாய் நோட்டு

ஐம்பது ரூபாய் நோட்டு

நூறு ரூபாய் நோட்டு

ஐநூறு ரூபாய் நோட்டு

ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு

எப்படி இருக்குமென்றுதான் தெரியவில்லை

ஆனால் அப்படி நோட்டுகள் இருப்பது தெரியும் எனக்கு

ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்குச் சென்றால் பார்த்து விடலாம்

அதற்குதான் நேரமில்லை போங்கள்

எப்படியோ நோட்டுகள் இருந்தால் சரி

அவை இருக்கிறபடியே இருந்து கொள்ளட்டும்

யாரும் பார்க்கவில்லையே என்ற வருத்தம் இல்லாமல்

*****

23 Sept 2022

Why Private Schools?

Why Private Schools?

I thought that in our country people prefer to send their children to private schools.

When I spoke to some foreign friends, I came to know that they also prefer to enroll their children in private schools.

They raise many questions about the quality of government schools. They want to give their children a satisfactory education as per their wish.

They claim that there are private schools that cater to their every wish.

Consider a government school teacher. He / She also prefers to send his children to private schools.

There are many ironies in our country. One of them is that government school teachers send their children to private schools.

Not only government school teachers but all government employees prefer to send their children to private schools. There may be a few exceptions. By pointing to those exceptions, you cannot dismiss this phenomenon as untrue.

The reason why parents seek private schools is the belief that private schools will fulfill their children's desires, wishes and expectations.

Besides, parents have full right to choose the school for their children.

Don't conclude that I am pro-private schools and anti-government schools.

I have enrolled my child in a government school. What is this nonsense you may ask?

I have limited expectations for my child. It is enough for her to know how to read and write and to understand society and herself. A government school is enough for me to accomplish that.

My guess is that your expectations are what make you choose a school for your children. If not then feel free to give your comments.

*****

ஏன் தனியார் பள்ளிகள்?

ஏன் தனியார் பள்ளிகள்?

நம் நாட்டில்தான் மக்கள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க விரும்புகின்றனர் என்று நான் நினைத்திருந்தேன்.

சில வெளிநாட்டு நண்பர்களிடம் பேசிய போது அவர்களும் அப்படித்தான் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில்தான் சேர்க்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து அவர்கள் அநேக கேள்விகளை எழுப்புகின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் வகையில் திருப்தியான கல்வியை அளிக்க விரும்புகின்றனர்.

அவர்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் தனியார் பள்ளிகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

நீங்கள் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியரை எடுத்தக் கொள்ளுங்கள். அவர் கூட தன்னுடைய பிள்ளைகளைத் தனியார் பள்ளியில்தான் படிக்க வைக்க விரும்புகிறார்.

நம் நாட்டில் பல நகைமுரண்கள் இருக்கின்றன. அதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதும் ஒன்று.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். அந்த விதிவிலக்குகளைக் காட்டி நீங்கள் இந்த பேருண்மையை உண்மையில்லை என்று மறுத்து விட முடியாது.

தங்கள் பிள்ளைகள் குறித்த ஆசைகளையும் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் தனியார் பள்ளிகள்தான் நிறைவேற்றும் என்ற நம்பிக்கைதான் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதன் பின்புலம்.

தவிரவும் தங்கள் பிள்ளைகளுக்கான பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள பெற்றோர்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது.

இதனால் நான் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவானவன், அரசுப் பள்ளிகளுக்கு எதிரானவன் என்று முடிவு கட்டி விடாதீர்கள்.

நான் என் பிள்ளையை அரசுப் பள்ளியில்தான் சேர்த்திருக்கிறேன். இதென்ன மடத்தனம் என்று நீங்கள் கேட்கலாம்.

என் பிள்ளை குறித்து என்னிடம் அளவான எதிர்பார்ப்புதான் உள்ளது. அவளுக்கு எழுதப் படிக்கவும், சமூகத்தையும் தன்னையும் புரிந்து கொள்ளத் தெரிந்தால் போதும். அதை நிறைவேற்றிக் கொள்ள அரசுப் பள்ளியே எனக்குப் போதுமானது.

உங்கள் எதிர்பார்ப்புகள்தான் உங்கள் பிள்ளைகளுக்கான பள்ளியைத் தேர்ந்தெடுக்க வைக்கிறது என்பது எனது கணிப்பு. அப்படி இல்லையெனில் நீங்கள் உங்கள் கருத்துகளைத் தாரளமாகச் சொல்லலாம்.

*****

22 Sept 2022

Eliminate boredom in studying Crossing the first half an hour

Eliminate boredom in studying

Crossing the first half an hour

The first half an hour is the hardest part of studying. After that it is very easy to study. So keep reading for the first half an hour anyway.

You may feel bored for the first half an hour. It can also be very irritating. Why it can even seem like torture.

That half an hour was the hardest part of studying. If half an hour passes you will not know from where such an interest in reading is coming from.

This applies equally to all boring jobs and duties, not just studying.

You might be doing a job that you don't like. There may not be an iota of interest in that job. But you can still have it when forced to do it. It's not a big problem.

You just spend half an hour on that job somehow. Then interest in that work will arise automatically.

Why is this first half an hour so painful? The mind needs that half an hour to get focused. If your mind is focused you can even do the work you hate willingly.

Boredom is like that. You can get rid of this boredom by engaging in any work in the first half an hour.

It's in your hands to manage the first half an hour. You should manage that time. No one can help or support it.

That's why I say, what job was it? Cross it through the first half an hour somehow. Every next hour you can act as you wish.

*****

படிப்பதில் உள்ள சலிப்பை ஒழித்துக் கட்டுதல் - முதல் அரைமணி நேரத்தை கடந்து விடுங்கள்

படிப்பதில் உள்ள சலிப்பை ஒழித்துக் கட்டுதல்

முதல் அரைமணி நேரத்தை கடந்து விடுங்கள்

முதல் அரை மணி நேரம் படிப்பதுதான் சிரமமானது. அதற்குப் பின் படிப்பது வெகு சுலபமானது. ஆகவே முதல் அரை மணி நேரம் எப்படியிருந்தாலும் தொடர்ந்து படித்துக் கொண்டிருங்கள்.

முதல் அரை மணி நேரம் உங்களுக்குச் சலிப்பாக இருக்கலாம். மிகுந்த எரிச்சல் தருவதாகவும் இருக்கலாம். ஏன் அது சித்திரவதையாகக் கூடத் தோன்றலாம்.

அந்த அரை மணி நேரம்தான் படிப்பதில் கஷ்டமானது. அரை மணி நேரத்தைக் கடந்து விட்டால் உங்களுக்கு படிப்பதில் அப்படி ஓர் ஆர்வம் எங்கிருந்து புறப்பட்டு வருகிறது என்ற உங்களுக்கே தெரியாது.

படிப்பதில் மட்டுமல்ல, அனைத்துச் சலிப்பான வேலைகளுக்கும் கடமைகளுக்கும் இது அப்படியே பொருந்தும்.

உங்களுக்குப் பிடிக்காத ஒரு வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கலாம். அந்த வேலையில் துளி கூட விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் அதை நீங்கள் தொடர்ந்து கொண்டிருக்கலாம். அது ஒரு பெரிய பிரச்சனையில்லை.

நீங்கள் அரை மணி நேரத்தை மட்டும் அந்த வேலையில் எப்படியாவது கடந்து விடுங்கள். பிறகு அந்த வேலையில் ஆர்வம் தானாக உண்டாகி விடும்.

ஏன் இந்த முதல் அரை மணி நேரம் இப்படி சிரமம் தருவதாக இருக்கிறது? மனதிற்கு ஒருமுகமான தன்மை கிடைக்க அந்த அரை மணி நேரம் தேவையாக இருக்கிறது. உங்கள் மனம் ஒருமுகப்பட்டு விட்டால் நீங்கள் வெறுக்கின்ற வேலையையும் விருப்பமாகச் செய்ய முடியும்.

சலிப்பும் இப்படிப்பட்டதுதான். முதல் அரை மணி நேரத்தில் எந்த வேலையில் வேண்டுமானாலும் ஈடுபட்டு உங்களால் இந்தச் சலிப்பைப் போக்கிக் கொள்ள முடியும்.

இந்த முதல் அரை மணி நேரம் தாக்குப்பிடிப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. நீங்கள் அந்த நேரத்தைச் சமாளித்தாக வேண்டும். அதற்கு யாரும் உதவவோ, துணை செய்வதோ முடியாது.

ஆகவேத்தான் சொல்கிறேன், எந்த வேலையாக இருந்தாலென்ன? முதல் அரை மணி நேரத்தை அதில் எப்படியாவது கடந்து விடுங்கள். அடுத்த ஒவ்வொரு மணி நேரமும் நீங்கள் நினைப்பது போலச் செயலாற்ற உங்களால் முடியும்.

*****

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...