நேரமில்லை என்ற உரையாடல்கள் எப்படி உருவாகின்றன?
உங்களைப் போன்று எனக்கும்
செயல்பட ஆசைதான், ஆனால் நேரமில்லை என்று என்னிடம் சொல்பவர்களைச் சமீப காலமாக அதிகம்
சந்தித்து வருகிறேன்.
ஒருவர் ஏன் என்னைப் போலச்
செயல்பட வேண்டும்? அதுவே ஓர் அபத்தம்.
ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள்.
யாரும் யாரைப் போலவும் செயல்பட வேண்டியதில்லை.
நான் எனக்குப் பிடித்த வகையில்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்களும் உங்களுக்குப் பிடித்தமான வகையில் செயல்படுங்கள்.
அதுதான் சரியானது.
அடுத்ததாக நேரமில்லை என்கிறார்களே.
ஆர்வமில்லை அல்லது பிடித்தமில்லை என்பதுதான் உண்மை.
நேரமில்லாத அளவுக்குப் பரபரப்பாக
யாரும் இயங்க மாட்டார்கள். அவரவர்கள் அவரவருக்கு ஆர்வமானவற்றில் இயங்கவே விரும்புவார்கள்.
உங்களுக்கு ஆர்வம் இருந்தால்
எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அதற்குதான் உங்கள் நேரத்தைச் செலவிடுவீர்கள்.
பிறகு ஏன் நேரமில்லை என்கிறார்கள்.
ஒன்றைப் பார்க்கும் போது அதைப் போல ஆக வேண்டும் என்று ஆசை. அதே நேரத்தில் அதைச் செய்வது
குறித்த மலைப்பு. முடியுமா என்ற தயக்கம்.
அப்போது வேறெப்படிச் சொல்ல
முடியும்? அங்கே நேரமில்லை என்ற பதில்தான் பொருத்தமாக இருக்கும்.
இப்படித்தான் நேரமில்லை என்ற
உரையாடல்கள் உருவாகின்றன.
*****
No comments:
Post a Comment