25 Sept 2022

நாம் பார்க்காவிட்டால் நோட்டுகள் இல்லாமல் போய் விடுமா

நாம் பார்க்காவிட்டால் நோட்டுகள் இல்லாமல் போய் விடுமா

கல்லாப்பெட்டிப் பிரச்சனை தீர்ந்து விட்டது

கல்லாப்பெட்டி இருக்குமிடத்தில்

ஒரு ஸ்கேனிங் கோட் இருக்கிறது

ஸ்கேன் செய்து ரகசிய எண்ணைக் கொடுத்தால்

பணம் பரிமாறி விடுகிறது

கல்லாப் பெட்டியென்றால்

ஒவ்வொரு பைசாவுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும்

தனித்தனி டபராக்கள் அல்லது தனித்தனி அறைகள்

ரோக்காவைப் பார்த்து கொடுக்கும் பணத்தை வாங்கி

பக்கத்தில் ஒரு கால்குலேட்டரை வைத்து

அப்படி இப்படி அமுக்கி

அதுவும் போதாதென்று பக்கத்திலொரு பேப்பரில்

கூட்டிக் கழித்து சில்லரை கொடுத்து

இது பரவாயில்லை

பைசா துல்லியமாகப் பரிமாறி விட முடிகிறது

என்ன ஒன்று

பத்து ரூபாய் நோட்டு

ஐம்பது ரூபாய் நோட்டு

நூறு ரூபாய் நோட்டு

ஐநூறு ரூபாய் நோட்டு

ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு

எப்படி இருக்குமென்றுதான் தெரியவில்லை

ஆனால் அப்படி நோட்டுகள் இருப்பது தெரியும் எனக்கு

ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்குச் சென்றால் பார்த்து விடலாம்

அதற்குதான் நேரமில்லை போங்கள்

எப்படியோ நோட்டுகள் இருந்தால் சரி

அவை இருக்கிறபடியே இருந்து கொள்ளட்டும்

யாரும் பார்க்கவில்லையே என்ற வருத்தம் இல்லாமல்

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...