30 Sept 2022

ஸ்காட்லாந்து யார்டை விட மேலான தமிழகக் காவல்துறை

ஸ்காட்லாந்து யார்டை விட மேலான தமிழகக் காவல்துறை

1859 இல் தொடங்கப்பட்ட தமிழகக் காவல் துறைக்கு எத்தனையோ சிறப்புகள் இருக்கின்றன. ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரானது என்று சிறப்பு அவற்றில் ஒன்று.

அண்மையில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளை ஒன்றில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் சம்பந்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்து அவரையும் கைது செய்தது காவல்துறை.

கொள்ளையடிக்கப்பட்ட நகையில் மூன்றரைக் கிலோவை மறைத்து வைத்திருந்தார் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர். அதாவது, கொள்ளையடிக்கப்பட்ட நகையைக் கொள்ளையடித்து மறைத்து வைத்திருந்தார்.

இந்தக் கைது சம்பவங்கள் எல்லாம் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற ஒரு சில நாட்களுக்குள்ளாகவே கண்டுபிடிக்கப்பட்டு விரைவு தொடர்வண்டி செல்லும் வேகத்தில் விறுவிறுவென்று நிகழ்ந்தன.

இச்சம்பவங்கள் குறித்த தலைப்பு செய்திகளைத் தினம் தினம் பார்த்த போது எனக்கு திகிலான ஒரு வரிக்கதையைத் தினம் தினம் படிப்பதைப் போலிருந்தது.

காவலர்கள் திருடர்களைப் பிடிக்க வேண்டியிருக்கலாம். காவலரையே திருடராகப் பிடிக்க வேண்டியிருக்கிறதென்றால், அதுவும் காவல்துறைக்குள்ளே திருடர்களைக் கண்டுபிடிப்பது என்றால் அது சாதாரணமானதா என்ன? காவல் துறைக்குள் ஒரு காவல் துறை அமைத்து செய்ய வேண்டிய காரியம் இது.

காவல்துறையும் அப்படிதான் இயங்குகிறது. பொது காவல் துறை தனி. ரகசிய காவல் துறை தனி. லஞ்ச ஒழிப்பு காவல் துறை தனி. ஊழல் தடுப்பு காவல் துறை தனி. பொருளாதாரக் குற்றப்பிரிவு தனி. இணைய வழிக் குற்றங்கள் தொடர்பான காவல் துறை தனி.

காவல் துறையின் குற்றங்களுக்காக ஒரு காவல் துறை இயங்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.

காவல்துறை காவலரையேக் கைது செய்த போது தமிழகக் காவல் துறை ஸ்காட்லாந்து யார்டை விட ஒரு படி மேலானது என்று தோன்றியது எனக்கு.

***

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...