பாதுகாப்பு என்பது வெற்று முழக்கமல்ல
பைக்கால் இடித்தவர்
ஒரு சாரி சொல்லியிருக்கலாம்
கேட்டால் நான் ராங் சைடில்
வந்ததாகச் சொல்கிறார்
ரைட் சைடில் வந்து இடித்து
சாரி சொல்லாமல் போனால்
அது ராங்க் சைடில் போவதாகாதா
என்னவோ டிராபிக் ரூல்ஸ் இருப்பதாகச்
சொல்கிறார்
அரைப் புரிந்து கொள்வது சிரமம்
என்பதால்
பக்கத்து வீட்டிற்குச் செல்வதென்றாலும்
ஆட்டோவில்தான் செல்கிறேன்
அவர் ராங் சைட் ரைட் சைட்
என்று
எல்லா சைடுகளிலும் செல்கிறார்
பேமானி என்றாலும் சாவு கிராக்கி
என்றாலும்
சிரித்துக் கொண்டே
கஸ்மாலம் டுபுக்கு போடாங்
கொய்யாலே என்று
சட்ட ரீதியான வார்த்தைகளால்
சமாளித்துக் கொள்கிறார்
சாலையில் பாதுகாப்பாகச் செல்வது
பாதுகாப்பாகச் செல்பவர்க்கு
மட்டுமல்ல
பாதுகாப்பின்றிச் செல்பவருக்கும்
பாதுகாப்பானது
புரிந்தவர்கள் பாதுகாப்பாகச்
செல்லுங்கள்
புரியாதவர்களுக்கு ஆட்டோ
டாக்சிதான் நல்லது
பாதுகாப்பையும் பாதுகாப்பின்மையையும்
பயப்படாமல்
பலவிதமாக எதிர்கொள்ள அவர்களால்தான்
முடியும்
கடல் போன்ற வெள்ளத்திலும்
வாகனங்களை லேண்ட் ரோவர் போல
ஓட்டிச் செல்பவர்களை
நாம்தான் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்
பாதுகாப்பில் சமரசங்கள் கூடாது
அதுவும் நம் மக்கள் மத்தியில்
நம் ஒப்பந்தகாரர்கள் போட்டு
வைத்த சாலைகளில் பயணிக்கையில்
*****
No comments:
Post a Comment