26 Sept 2022

வாழ்த்து பிச்சையிட்டால் குறைந்தா போய் விடுவார்

வாழ்த்து பிச்சையிட்டால் குறைந்தா போய் விடுவார்

பிச்சைகாரர் கனக்கச்சிதமாக

பத்து ரூபாய் கேட்கிறார்

முன்னரே கொடுத்து வைத்தது போல

இன்று எத்தனை பேரைப் பார்த்து

எத்தனை பத்து ரூபாய்களுக்குக்

கணக்கு வைத்துள்ளாரோ

பத்து ரூபாய் கொடுத்து விட்டால்

மவராசனாய் இருப்பா என்பார்

கொடுக்கா விட்டால்

கட்டையில போறவனே என்பார்

பத்து ரூபாய் கொடுத்து

மவராசனாய் ஆனவர் எத்தனை பேரோ

கொடுக்காமல் போய்

கட்டையில் போனவர் எத்தனை பேரோ

நான் பார்க்கும் போது

பத்து ரூபாய் கொடுத்து விடுவதுண்டு

ஓர் அவசரம் என்றால்

இருபது ரூபாயாக வாங்கிக் கொள்வதுமுண்டு

எத்தனையோ பத்து ரூபாய்கள் கொடுத்திருக்கிறேன்

இருபது ரூபாய்கள் வாங்கியிருக்கிறேன்

ஒரு முறையாவது மவராசனாய் இரு என்று சொன்னால்

குறைந்தா போய் விடுவார் பிச்சைக்காரர்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...