25 Sept 2022

வரலாற்றை ஆய்தலும் மக்களின் வாழ்வியலும்

வரலாற்றை ஆய்தலும் மக்களின் வாழ்வியலும்

அரசர்கள் புறாக்கள் வளர்த்திருக்கிறார்கள்

மக்கள் கோழிகள் வளர்த்திருக்கிறார்கள்

அரசர்களின் புறாக்கள் தூதிற்காக என்கிறார்கள்

மக்களின் கோழிகள் காலை கடிகாரம் போல என்கிறார்கள்

புறாக்களைக் கறிக்காகவும் வளர்த்திருக்கலாம்

கோழிகளையும்தான்

வரலாற்றை மறுகட்டுமானம் செய்து எழுதினால்தான்

உண்மை வெளியில் வரும்

இருண்டு கிடக்கும் வரலாற்றில்

டார்ச் லைட் அடிக்கும் போது

பேட்டரிகள் பல்பு வாங்காமல் இருக்க வேண்டும்

அது தவிர வரலாற்றில் இருண்ட காலம் ஒன்றுண்டு

என்று வேறு சொல்லி பயமுறுத்துகிறார்கள்

ஏதோ வளர்த்திருக்கிறார்கள் என்ற செய்தி போதுமானது

இன்றைய வரலாற்றைப் பிழையின்றி எழுத வேண்டும்

புறாக்களைப் பந்தயத்திற்காக வளர்க்கிறார்கள்

கோழிகளைக் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் வளர்க்கிறார்கள்

மக்கள் கோழிகளைக் கடைகளில் கறிகளாக வாங்கிக் கொள்கிறார்கள்

அது சரி அரசர்கள் எங்கே இருக்கிறார்கள் புறாக்கள் வளர்க்க

மக்களுக்கு எங்கே நேரமிருக்கிறது கோழி வளர்க்க

வீட்டுக்கொரு போன்சாய் மரம் வளர்த்தால் பெரிய விசயம்

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...