31 Oct 2022

பத்தாயிரம் பத்து கோடி ஆகும் நாள் எந்நாளோ?!

பணம் பற்றாத போது…

யாரைக் கேட்டாலும் பணம் பற்றவில்லை என்கிறார்கள்

இப்போதுதான் அதி நவீன பிரிண்டர்கள் வந்து விட்டதே, கொஞ்சம் அச்சடித்துக் கொள்ள வேண்டியதுதானே என்றால் தயங்குகிறார்கள்.

பணத்தை உருவாக்குவது என்றால் மக்களிடம் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது.

அந்தப் பயம் இல்லாதவர்கள்தான் பணக்காரர்கள் ஆகிறார்கள். கோடீஸ்வரர்களாகிறார்கள். வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் வாய்ப்புகளையும் பெறுகிறார்கள்.

******

பத்தாயிரம் பத்து கோடி ஆகும் நாள் எந்நாளோ?!

மாமா எப்போது வந்தாலும் பத்தாயிரம் கேட்பார்.

அதற்குக் குறைந்து கேட்டதில்லை.

அது மாதச் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்காயிற்றே என்றால் அதெல்லாம் முடியாது, கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார் என்பார்.

மாமனைப் பெற்ற மாப்பிள்ளைகளால் மாமன் சொல்லை மறுக்கவும் முடியுமோ?

பத்தாயிரத்தைக் கொடுத்து விட்டால் அடுத்து ஒரு பத்து மாதங்களுக்கு எட்டு வைத்துப் பார்க்க மாட்டார்.

சரியாகப் பதினொன்றாவது மாதமோ, அது தப்பிப் போனால் பனிரெண்டாவது மாதமோ மறுபடியும் எட்டிப் பார்ப்பார்.

இந்த முறையும் பத்தாயிரம்தான் கேட்பார்.

ஒவ்வொரு முறையும் பத்தாயிரம் கேட்கும் போது கேட்காமல் இருக்க முடியுமா என்று பத்தாயிரத்தை வாங்கி என்ன செய்கிறீர்கள் மாமா என்றால்,

அது வந்துடா மாப்ளே! ஒரு தொழில் தொடங்கி நல்ல நிலைமைக்கு வந்து விடலாம் என்று பார்க்கிறேன், முடிய மாட்டேன்கிறேதடா என்பார்.

என்றாவது ஒரு நாள் பத்தாயிரத்தை பத்து கோடியாக்குவேன் என்று சூளுரைத்து விட்டுப் பத்தாயிரத்தை வாங்கிக் கொண்டு போவார்.

என்னவோ மாமாவின் சூழ்நிலையோ, கிரக நிலையோ பத்தாயிரத்தைப் பத்து கோடியாக்க முடியாமல் மறுபடியும் நிச்சயம் திரும்பவும் வருவார்.

நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். மாதா மாதம் ஆயிரம் வீதம் எடுத்து வைத்து மாமா வரும் பத்தாவது மாதம் பத்தாயிரத்தை எடுத்துக் கொடுத்து விடுவேன்.

*****

நான் ஏன் கார் வாங்கவில்லை?

நான் ஏன் கார் வாங்கவில்லை?

நீங்கள் ஏன் இன்னும் மகிழுந்து (கார்) வாங்கவில்லை என்கிறார்கள்.

எதற்கு வாங்க வேண்டும்?

டோல்கேட்டில் கட்ட என்னிடம் பணமில்லை.

அதனால் வாடகைக்காரில்தான் செல்கிறேன்.

டோல்கேட் கட்டணத்தை அவர் கட்டிக் கொள்கிறார்.

வாடகைக் கட்டணத்தை மட்டும் பேரம் பேசி நான் கொடுத்துக் கொள்கிறேன்.

டோல்கேட்டில் பேரம் பேச என்னால் முடியாது.

*****

நாளை வரட்டும் இன்று போ!

நாளைக்குப் பணம் வந்ததும் தந்து விடுகிறேன்.

நாளைக்குப் பணம் வருகின்ற போது

இன்றைக்கு ஏனடா என்னிடம் கேட்கிறாய்?

இன்று போய் நாளை வா!

*****

நண்பர்களே! அப்படிச் செய்து விடாதீர்கள்!

நீங்கள் யாரைப் போல எழுதுகிறீர்கள்?

யாரைப் போலவும் எழுதாமல் இருக்க மெனக்கெடுகிறேன்.

என்னை யாரைப் போலவும் எழுத வைத்து விடாதீர்கள்.

*****

 

அவர்கள் ஏன் காணாமல் போய் விடுகிறார்கள்?

வருசத்துக்கு பதினைந்து சதவீத வட்டி, முதலீடு செய்யுங்கள் என்று ஏகப்பட்ட வற்புறுத்தல் மற்றும் நெருக்கடி.

நான் என்ன செய்வேன் சொல்லுங்கள்.

பணம் கொடுங்கள், முதலீடு செய்கிறேன் என்று சொல்லி விட்டேன்.

அதற்குப் பிறகு ஆட்கள் காணாமல் போய் விடுகிறார்கள்.

*****

உங்களுக்காகவே ஒரு தத்துவம்

நல்ல ஒரு தத்துவம் சொல்ல முடியுமா என்றார்கள்.

கெட்ட ஒரு தத்துவமும் இருக்க முடியுமோ என்னவோ?

சொன்னால் போயிற்று என்று சொன்னேன்.

எல்லாரும் கஷ்டத்தைத் தாண்டிதான் வர வேண்டும்

நீங்கள் நல்லவர் என்பதற்காக அதைத் தாண்டாமல் வர முடியாது.

எல்லாரும் கை தட்டினார்கள்.

எதற்கு என்றேன், நீங்கள் எல்லாம் கெட்டவர்களா என்று கேட்டபடி.

இனிமேல் என்னிடம் தத்துவம் கேட்பதில்லை என்ற முடிவோடு கலைந்து சென்று விட்டார்கள்.

*****

30 Oct 2022

Service storm passed away

Service storm passed away

May this night also dawn like this

It would have been better if the sun hadn't risen

Hastily rose

Stopping is no longer possible

It is good if the sun is not too hot

Suitable if it rains

Even a small drizzle is enough

The city is crying

Rather than the state itself crying

Writing that the sky also cries

That will fit

A cloud can help poets if they think

Otherwise

The wind has stopped

We disappeared to breathe

The seashells have melted

You have turned our eyes into seashells

Our moon has fallen

Our skies darkened during the day

(Sunburn is another matter)

You can write a lot like this

I didn't expect

The service storm is passed away

Many poets have been produced

When a great man dies

There are many poets

Without surgery without hospital cost

They have a healthy delivery

If other great men die soon

Others will be reborn as poets

What we have in hand

We have nothing at our hand

Great men die and poets are born

*****

சேவைப்புயல் மறைந்து விட்டார்

சேவைப்புயல் மறைந்து விட்டார்

இந்த இரவும் இப்படி விடியுமோ

சூரியன் உதிக்காதிருந்தால் நன்றாயிருந்திருக்கும்

அவசரப்பட்டு உதித்து விட்டது

இனிமேல் நிறுத்துவது சாத்தியப்படாது

வெயிலை அதீதமாய்க் கக்காமல் இருந்தால் சரி

மழை வந்தால் பொருத்தம்

சிறு தூறல் கூட போதும்

மாநகரமே அழுகிறது

மாநிலமே அழுகிறது என்பதை விட

வானமும் அழுகிறது என்று எழுதுவது

அவ்வளவு பொருந்திப் போகும்

மேகம் நினைத்தால் கவிஞர்களுக்கு உதவலாம்

மற்றபடி

காற்று நின்று விட்டது

நாங்கள் சுவாசிக்க மறைந்து விட்டோம்

கடலலைகள் கரைந்து விட்டன

எங்கள் கண்களை கடலலைகளாக்கி விட்டீர்

எங்கள் நிலா உதிர்ந்து விட்டது

எங்கள் வானம் பகலிலே இருண்டு விட்டது

(வெயில் சுட்டெரிப்பது வேறு விசயம்)

இப்படி நிறைய எழுதிக் கொள்ளலாம்

நான் எதிர்பார்க்கவில்லை

சேவைப்புயல் மறைவில்

நிறைய கவிஞர்கள் உண்டாகி விட்டார்கள்

ஒரு பெரிய மனிதர் மறைந்தால்

கவிஞர்கள் ஏகப்பட்டோர்

ஆஸ்பிட்டல் செலவின்றி அறுவை சிகிச்சையின்றி

சுகப் பிரசவமாகி விடுகிறார்கள்

மற்ற பெரிய மனிதர்கள் விரைவில் செத்தால்

மற்றுமுள்ளோரும் கவிஞர்களாக மறுபிரசவம் ஆகி விடுவார்கள்

நம் கையில் என்ன இருக்கிறது

எமனில் கையில் எல்லாம் இருக்கிறது

பெரிய மனிதர்கள் இறப்பதும் கவிஞர்கள் பிறப்பதும்

*****

29 Oct 2022

The legend of the wander

The legend of the wander

If you go on a trip

That's a problem

I will buy some things

What to take and where to put

In the already visited tours

Wastages bought

On all shelves

Well it happened

If you can fill the trash can

It is already full

Like blaming the trip

If you are going on a trip

New houses with wardrobes

A lot has to be built

Functions of gift giving

A lot to attend to

Even if you don't give an invitation

Around the beautiful covers

Keep on giving

Closet cleaning is house cleaning

For a few days now

Until the supplies run low

Do not arrange tours

To the center of Tourism

Let it be said

*****

ஊர் பொறுக்கிப் புராணம்

ஊர் பொறுக்கிப் புராணம்

சுற்றுலா சென்று வந்தால்

அது ஒரு பிரச்சனை

ஏதேதோ பொருட்களை வாங்கி வந்து விடுகிறேன்

எதை எடுத்து எங்கே வைப்பது

ஏற்கனவே சென்று வந்த சுற்றுலாக்களில்

வாங்கி வந்த குப்பைகள்

அத்தனை அலமாரிகளிலும்

சரிதான் போ ஆனது ஆயிற்று

குப்பைத் தொட்டியில் நிரப்பலாம் என்றால்

ஏற்கனவே நிரம்பிக் கிடக்கிறது அது

பயணத்தைப் பழி தீர்ப்பது போல

இனி சுற்றுலா செல்வதாக இருந்தால்

அலமாரி வைத்த புது வீடுகள்

நிறைய கட்டிக் கொள்ள வேண்டும்

கிப்ட் கொடுக்கும் பங்ஷன்கள்

நிறைய கலந்து கொள்ள வேண்டும்

இன்விடேஷன் கொடுக்கா விட்டாலும் கூட

அழகழகு கவர்களில் சுற்றிக்

கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்

அலமாரியின் சுத்தம் வீட்டின் சுத்தம்

இப்போதைக்குச் சில நாட்களுக்குக்

கொஞ்சம் பொருட்கள் குறையும் வரை

சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று

ஆண்டவர் சுற்றுலா நிறுவனத்திடம்

சொல்லி வைத்து விட வேண்டும்

*****

28 Oct 2022

தீபாவளியில் எது கஷ்டம்?

தீபாவளியில் எது கஷ்டம்?

தீபாவளிக்குப் பலகாரம் செய்வது?

தீபாவளிக்குத் துணிகள் எடுப்பது?

தீபாவளிக்கு வெடிகள் வாங்குவது?

இதில் எது கஷ்டம் என்கிறார்கள் தற்குறிகள்.

தீபாவளி வந்தால் ஊருக்குப் போய் விட்டு வர வேண்டும் என்பதுதான் கஷ்டமாக இருக்கிறது.

*****

கம்பர் இன்றிருந்தால்…

கம்பர் இன்றிருந்தால்

கடன் கொள்ளும் நண்பர் போல என்று எழுதியிருப்பார்.

*****

பாருக்குள்ளே நல்ல பாரு

பாருக்குள்ளே நல்ல பாரு

டாஸ்மாக் பாரு

என்று எழுதுவதற்குள் பாரதி இறந்து விட்டார்.

*****

ஞானத்தங்கமே! ஞானத்தங்கமே!

இருக்கும் இடத்தை விட்டு

இல்லாத இடம் தேடி அலைவார்

கல்யாணப் பந்தியிலே ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

உண்பர் அருகில் நின்றால்

அவர் எழுந்து சென்றதும்

இடம் கிடைக்குமே ஞானத்தங்கமே

பந்தியில் இடம் பிடிக்க

சிந்தித்துச் செயல்பட வேண்டுமடி ஞானத்தங்கமே

*****

குற்ற உணர்வும் ஆறுதல் உணர்வும்

ஆபத்தான நிதியமைச்சர்கள்

பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையரைப் பார்த்தீர்களா?

நந்தினியின் நகைகளைக் கழற்றி வைப்பதே அவரின் வேலையாக இருக்கிறது.

சோழர் கால நிதியமைச்சர் அவர் என்கிறார்கள்.

அவர் உடலில் 64 விழுப்புண்கள் என்ற போது பெண்களின் நகைகளைக் கழற்றி வைப்பது எவ்வளவு ஆபத்தான வேலை என்பதை உணர்ந்தேன்.

*****

மனக்குரலின் பிரமாண்டம்

அதிதி ஷங்கரைப் பார்த்தேன். (அதிதி சங்கர் என்பவர் வேறு ஒருவராக இருக்கலாம்.)

சாதாரண பெண்ணைப் போலத்தான் இருக்கிறார்.

ஷங்கர் பெண் என்பதால் பிரமாண்டமாக இருப்பார் என்று நினைத்து விட்டேன்.

*****

குற்ற உணர்வும் ஆறுதல் உணர்வும்

இந்த வலைப்பூவைப் படித்தால்தான் இரவில் தூக்கம் வருகிறது என்று பலர் என்னிடம் சொல்கிறார்கள்.

ஒரு தூக்க மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்தின் நட்டத்திற்கு நான் காரணமாகிறேனோ என்ற குற்ற உணர்வு என்னை உறுத்துகிறது.

நான் படித்த காலங்களில் ‘இயற்பியல்’ புத்தகத்தைப் படித்தால் தூக்கம் வந்து விடும்.

‘இயற்பியல்’ புத்தகங்களே அப்படி இருந்திருக்கும் போது நான் மட்டும் ஏன் குற்ற உணர்வு கொள்ள வேண்டும் என்னை ஆறுதல் செய்து கொள்கிறேன்.

*****

27 Oct 2022

மாணவருக்கும் கணவருக்கும் வேறுபாடு

மாணவருக்கும் கணவருக்கும் வேறுபாடு

மாணவருக்கும் கணவருக்கும் குறிப்பிடத்தக்க ஒரு வேறுபாடே இருக்கிறது.

மாணவரிடம் கேட்டால் பட்டர்பிளை என்றால் பட்டாம்பூச்சி என்பார்.

கணவரிடம் கேட்டால் மிக்ஸி, கிரைண்டர், குக்கர் என்பார்.

*****

இவ்வளவு நேரம் நீ மெகா சீரியல் பார்ப்பதையெல்லாம் எப்போது கின்னஸில் சேர்க்கப் போகிறார்கள் என்றேன்.

மனைவிக்குப் பெருமை தாங்கவில்லை.

எனக்கும்தான்.

இவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்ப்பதால்தான் உனக்கு இடுப்பு வலிக்கிறதோ? நான் அடிக்கடி மூவ் தடவி விட வேண்டியிருக்கிறதோ? என்றேன்.

மனைவிக்கு எரிச்சல் தாங்கவில்லை.

எனக்குத்தான்.

*****

மக்கள் ஏன் அரசாங்கப் பள்ளிகளில் சேர்க்க மாட்டேன்கிறார்கள்?

மக்கள் ஏன் அங்காடி அரிசியில் சமைக்க மாட்டேன்கிறார்கள்?

மக்கள் ஏன் இலவச வேட்டி சேலையைக் கட்ட மாட்டேன்கிறார்கள்?

மக்கள் இலவசத்தை வெறுக்கிறார்களோ?

பொங்கல் பரிசு என்று ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இலவசம் என்று ஒதுக்கி விடுவார்களோ என்று பயந்து போய் பார்த்தால்…

 அதை ஆசை ஆசையாகப் பயன்படுத்துகிறார்கள்.

மக்களுக்கு இலவசத்தின் மீது வெறுப்பில்லை.

*****

இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும் என்று சொன்னவரைப் பார்த்து பரவசப்பட்டேன். புல்லரிக்க நெல்லரிக்க மெய் சிலிர்த்து பொய் சிலிர்த்து பூரித்துப் போய் சப்பாத்தி புரோட்டாவானேன்.

அற்புதமய்யா! அற்புதமய்யா! என்று பரவசப்பட்டுக் கொண்டே உங்களிடம் எத்தனை ஏக்கர் வயல் உள்ளதய்யா? என்றேன்.

வயல் எல்லாம் இல்லை, பத்து ப்ளாட்டுகள்தான் இருக்கின்றன என்றார்.

நான் பரவசப்பட்டதை விடுத்து இயற்கை நிலைக்குத் திரும்பி விட்டேன்.

*****

தீபாவளியாம் தீபாவளி

தீபாவளியாம் தீபாவளி

தீபாவளி என்றால்

மகனோ மகளோ வெடி வெடிக்கிறார்

அம்மா படம் பிடிக்கிறார்

அப்பா ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்கிறார்

*****

அண்ணன் வெடி வைக்க தம்பி வீடியோ எடுக்க வேண்டியிருக்கிறது. பிறகு தம்பி வெடி வைக்க அண்ணன் வீடியோ எடுக்க வேண்டியிருக்கிறது. அந்த வீடியோவை எல்லா குடும்ப வாட்ஸாப் குழுக்களுக்கு அனுப்பித் தொலைய வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் அனுப்பும் வீடியோக்களைப் பார்த்து ஸ்மைலி போட வேண்டியிருக்கிறது.

தீபாவளி என்றால் வேலைகள் அதிகமாகி விடுகின்றன. களைத்துப் போனாலும் ஓய்வெடுக்க முடியாமல் வாட்ஸாப்பில் உழன்று கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

வருடத்தில் இப்படி ஒரு நாள் தீபாவளி வருவதால் சமாளிக்க முடிகிறது. தினம் தினம் என்றால் மார்க் ஸக்கர்பெர்க் என்ன செய்வார்? வாட்ஸாப்தான் என்ன செய்யும்? பேஸ்புக் மெட்டா என்று பெயர் மாற்றிக் கொண்டதால் கெத்தாகச் சமாளிக்கத்தான் முடியுமோ?

*****

இந்தத் தீபாவளிக்கு எவ்வளவு வெடி வெடித்தீர்கள் என்றார்கள்.

ஆறு ஐநூறு ரூபாய் நோட்டுகளைக் கொளுத்தினேன் என்றேன்.

அச்சச்சோ! நீயென்ன மடையனா முட்டாள் பையா? என்றார்கள்.

மூவாயிரத்துக்கு வெடி வாங்கி வெடித்ததை வெறெப்படிச் சொல்லச் சொல்கிறார்கள்?

******

தீபாவளிக்குப் புது சட்டை போட்டீர்களா?

தீபாவளிக்கு புதுப் பலகாரங்கள் சாப்பீட்டிர்களா?

தீபாவளிக்கு புது வெடிகள் வெடித்தீர்களா?

தீபாவளிக்கு புது நகைகள் வாங்கினீர்களா?

தீபாவளிக்கு புது பங்குகள் வாங்கினீர்களா?

இத்துடன்

புதிதாக இதையும் சேர்த்துக் கொள்கிறார்கள்

தீபாவளிக்குப் புதுப்படம் பார்த்தீர்களா?

எங்கே புதுப்படம் பார்ப்பது?

பார்ப்பதெல்லாம் பழைய படங்கள் போலவே இருக்கின்றன.

*****

தீபாவளி வந்து விட்டால் பலகாரங்களைத் தின்று பலாத்காரமாய்ப் போகிறது. தின்னா விட்டால் பலகாரங்கள் வீணாகப் போகின்றன என்ற சத்தத்தைக் கேட்டுக் கலவரமாய்ப் போகிறது.

******

தீபாவளி, பொங்கல் என்றால் அடித்துப் பிடித்துக் கொண்டு ஊருக்குப் போகிறார்கள். மற்ற நாட்களில் அப்படிப் போக மறுக்கிறார்கள்.

இந்தத் தீபாவளியும் பொங்கலும் இல்லையென்றால் சொந்த ஊர் மறந்து போகுமோ? சென்னையும் திருப்பூரும் ஓசுரும் சொந்த் ஊர் என்று ஆகுமோ?

*****

26 Oct 2022

குடை விரித்தேன் வருவாரில்லையோ?!

ரியல் எஸ்டேட்கார்களின் கண்டுபிடிப்பு

ஒரு வணிக வளாகம் வந்து விட்டால்

அந்த ஊர் வளர்ந்து விடுகிறது

என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்

ரியல் எஸ்டேட்காரர்கள்.

*****

நனைந்தபடி வீடு திரும்புதல்

மருத்துவமனை அருகில்

பள்ளி அருகில்

கல்லூரி அருகில்

வர்த்தக நிறுவனங்கள் அருகில்

திரையரங்கங்கள் அருகில்

பேருந்து நிலையங்கள் அருகில்

அரசு அலுவலகங்கள் அருகில்

ஏன் மனிதா

உனக்குக் கால்கள் கிடையாதா

உன்னால் நடந்து செல்ல முடியாதா

கால்களை விடு

உன்னிடம் வாகனங்கள் கிடையாதா

வாகனத்தைச் செலுத்தி

உனக்குச் செல்லத் தெரியாதா

வீட்டுமனைகள் வாங்க வந்திருந்தோரிடம்

இப்படி விளம்பரம் செய்தேன்

ஆனாலும் வீட்டுமனைகளின் விற்பனை பிய்த்துக் கொண்டு போயிற்று

குடை விரித்தேன் வருவாரில்லையோ என்று

மழையில் நனைந்தபடி

டாஸ்மாக் பக்கத்தில் உள்ள

பெட்டிக் கடையில் ஒரு பன்னீர் சோடா

வாங்கிக் குடித்து விட்டு

மடக்கி வைத்திருந்த குடையைக்

கக்கத்தில் வைத்தபடி வீடு திரும்பினேன்

அட அசடே இப்படியா மழையில்

நனைத்துக் கொண்டு வருவது என்று

குடையை வாங்கி

அதன் தலையைத் துவட்டி விட ஆரம்பித்தாள் மனைவி

*****

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...