28 Oct 2022

குற்ற உணர்வும் ஆறுதல் உணர்வும்

ஆபத்தான நிதியமைச்சர்கள்

பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையரைப் பார்த்தீர்களா?

நந்தினியின் நகைகளைக் கழற்றி வைப்பதே அவரின் வேலையாக இருக்கிறது.

சோழர் கால நிதியமைச்சர் அவர் என்கிறார்கள்.

அவர் உடலில் 64 விழுப்புண்கள் என்ற போது பெண்களின் நகைகளைக் கழற்றி வைப்பது எவ்வளவு ஆபத்தான வேலை என்பதை உணர்ந்தேன்.

*****

மனக்குரலின் பிரமாண்டம்

அதிதி ஷங்கரைப் பார்த்தேன். (அதிதி சங்கர் என்பவர் வேறு ஒருவராக இருக்கலாம்.)

சாதாரண பெண்ணைப் போலத்தான் இருக்கிறார்.

ஷங்கர் பெண் என்பதால் பிரமாண்டமாக இருப்பார் என்று நினைத்து விட்டேன்.

*****

குற்ற உணர்வும் ஆறுதல் உணர்வும்

இந்த வலைப்பூவைப் படித்தால்தான் இரவில் தூக்கம் வருகிறது என்று பலர் என்னிடம் சொல்கிறார்கள்.

ஒரு தூக்க மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்தின் நட்டத்திற்கு நான் காரணமாகிறேனோ என்ற குற்ற உணர்வு என்னை உறுத்துகிறது.

நான் படித்த காலங்களில் ‘இயற்பியல்’ புத்தகத்தைப் படித்தால் தூக்கம் வந்து விடும்.

‘இயற்பியல்’ புத்தகங்களே அப்படி இருந்திருக்கும் போது நான் மட்டும் ஏன் குற்ற உணர்வு கொள்ள வேண்டும் என்னை ஆறுதல் செய்து கொள்கிறேன்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...