26 Oct 2022

குடை விரித்தேன் வருவாரில்லையோ?!

ரியல் எஸ்டேட்கார்களின் கண்டுபிடிப்பு

ஒரு வணிக வளாகம் வந்து விட்டால்

அந்த ஊர் வளர்ந்து விடுகிறது

என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்

ரியல் எஸ்டேட்காரர்கள்.

*****

நனைந்தபடி வீடு திரும்புதல்

மருத்துவமனை அருகில்

பள்ளி அருகில்

கல்லூரி அருகில்

வர்த்தக நிறுவனங்கள் அருகில்

திரையரங்கங்கள் அருகில்

பேருந்து நிலையங்கள் அருகில்

அரசு அலுவலகங்கள் அருகில்

ஏன் மனிதா

உனக்குக் கால்கள் கிடையாதா

உன்னால் நடந்து செல்ல முடியாதா

கால்களை விடு

உன்னிடம் வாகனங்கள் கிடையாதா

வாகனத்தைச் செலுத்தி

உனக்குச் செல்லத் தெரியாதா

வீட்டுமனைகள் வாங்க வந்திருந்தோரிடம்

இப்படி விளம்பரம் செய்தேன்

ஆனாலும் வீட்டுமனைகளின் விற்பனை பிய்த்துக் கொண்டு போயிற்று

குடை விரித்தேன் வருவாரில்லையோ என்று

மழையில் நனைந்தபடி

டாஸ்மாக் பக்கத்தில் உள்ள

பெட்டிக் கடையில் ஒரு பன்னீர் சோடா

வாங்கிக் குடித்து விட்டு

மடக்கி வைத்திருந்த குடையைக்

கக்கத்தில் வைத்தபடி வீடு திரும்பினேன்

அட அசடே இப்படியா மழையில்

நனைத்துக் கொண்டு வருவது என்று

குடையை வாங்கி

அதன் தலையைத் துவட்டி விட ஆரம்பித்தாள் மனைவி

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...