30 Oct 2022

சேவைப்புயல் மறைந்து விட்டார்

சேவைப்புயல் மறைந்து விட்டார்

இந்த இரவும் இப்படி விடியுமோ

சூரியன் உதிக்காதிருந்தால் நன்றாயிருந்திருக்கும்

அவசரப்பட்டு உதித்து விட்டது

இனிமேல் நிறுத்துவது சாத்தியப்படாது

வெயிலை அதீதமாய்க் கக்காமல் இருந்தால் சரி

மழை வந்தால் பொருத்தம்

சிறு தூறல் கூட போதும்

மாநகரமே அழுகிறது

மாநிலமே அழுகிறது என்பதை விட

வானமும் அழுகிறது என்று எழுதுவது

அவ்வளவு பொருந்திப் போகும்

மேகம் நினைத்தால் கவிஞர்களுக்கு உதவலாம்

மற்றபடி

காற்று நின்று விட்டது

நாங்கள் சுவாசிக்க மறைந்து விட்டோம்

கடலலைகள் கரைந்து விட்டன

எங்கள் கண்களை கடலலைகளாக்கி விட்டீர்

எங்கள் நிலா உதிர்ந்து விட்டது

எங்கள் வானம் பகலிலே இருண்டு விட்டது

(வெயில் சுட்டெரிப்பது வேறு விசயம்)

இப்படி நிறைய எழுதிக் கொள்ளலாம்

நான் எதிர்பார்க்கவில்லை

சேவைப்புயல் மறைவில்

நிறைய கவிஞர்கள் உண்டாகி விட்டார்கள்

ஒரு பெரிய மனிதர் மறைந்தால்

கவிஞர்கள் ஏகப்பட்டோர்

ஆஸ்பிட்டல் செலவின்றி அறுவை சிகிச்சையின்றி

சுகப் பிரசவமாகி விடுகிறார்கள்

மற்ற பெரிய மனிதர்கள் விரைவில் செத்தால்

மற்றுமுள்ளோரும் கவிஞர்களாக மறுபிரசவம் ஆகி விடுவார்கள்

நம் கையில் என்ன இருக்கிறது

எமனில் கையில் எல்லாம் இருக்கிறது

பெரிய மனிதர்கள் இறப்பதும் கவிஞர்கள் பிறப்பதும்

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...