மாணவருக்கும் கணவருக்கும் வேறுபாடு
மாணவருக்கும் கணவருக்கும்
குறிப்பிடத்தக்க ஒரு வேறுபாடே இருக்கிறது.
மாணவரிடம் கேட்டால் பட்டர்பிளை
என்றால் பட்டாம்பூச்சி என்பார்.
கணவரிடம் கேட்டால் மிக்ஸி,
கிரைண்டர், குக்கர் என்பார்.
*****
இவ்வளவு நேரம் நீ மெகா சீரியல்
பார்ப்பதையெல்லாம் எப்போது கின்னஸில் சேர்க்கப் போகிறார்கள் என்றேன்.
மனைவிக்குப் பெருமை தாங்கவில்லை.
எனக்கும்தான்.
இவ்வளவு நேரம் உட்கார்ந்து
பார்ப்பதால்தான் உனக்கு இடுப்பு வலிக்கிறதோ? நான் அடிக்கடி மூவ் தடவி விட வேண்டியிருக்கிறதோ?
என்றேன்.
மனைவிக்கு எரிச்சல் தாங்கவில்லை.
எனக்குத்தான்.
*****
மக்கள் ஏன் அரசாங்கப் பள்ளிகளில்
சேர்க்க மாட்டேன்கிறார்கள்?
மக்கள் ஏன் அங்காடி அரிசியில்
சமைக்க மாட்டேன்கிறார்கள்?
மக்கள் ஏன் இலவச வேட்டி சேலையைக்
கட்ட மாட்டேன்கிறார்கள்?
மக்கள் இலவசத்தை வெறுக்கிறார்களோ?
பொங்கல் பரிசு என்று ஆயிரம்
ரூபாய் கொடுத்தால் இலவசம் என்று ஒதுக்கி விடுவார்களோ என்று பயந்து போய் பார்த்தால்…
அதை ஆசை ஆசையாகப் பயன்படுத்துகிறார்கள்.
மக்களுக்கு இலவசத்தின் மீது
வெறுப்பில்லை.
*****
இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப
வேண்டும் என்று சொன்னவரைப் பார்த்து பரவசப்பட்டேன். புல்லரிக்க நெல்லரிக்க மெய் சிலிர்த்து
பொய் சிலிர்த்து பூரித்துப் போய் சப்பாத்தி புரோட்டாவானேன்.
அற்புதமய்யா! அற்புதமய்யா!
என்று பரவசப்பட்டுக் கொண்டே உங்களிடம் எத்தனை ஏக்கர் வயல் உள்ளதய்யா? என்றேன்.
வயல் எல்லாம் இல்லை, பத்து
ப்ளாட்டுகள்தான் இருக்கின்றன என்றார்.
நான் பரவசப்பட்டதை விடுத்து
இயற்கை நிலைக்குத் திரும்பி விட்டேன்.
*****
No comments:
Post a Comment