நான் ஏன் கார் வாங்கவில்லை?
நீங்கள் ஏன் இன்னும் மகிழுந்து
(கார்) வாங்கவில்லை என்கிறார்கள்.
எதற்கு வாங்க வேண்டும்?
டோல்கேட்டில் கட்ட என்னிடம்
பணமில்லை.
அதனால் வாடகைக்காரில்தான்
செல்கிறேன்.
டோல்கேட் கட்டணத்தை அவர்
கட்டிக் கொள்கிறார்.
வாடகைக் கட்டணத்தை மட்டும்
பேரம் பேசி நான் கொடுத்துக் கொள்கிறேன்.
டோல்கேட்டில் பேரம் பேச என்னால்
முடியாது.
*****
நாளை வரட்டும் இன்று போ!
நாளைக்குப் பணம் வந்ததும்
தந்து விடுகிறேன்.
நாளைக்குப் பணம் வருகின்ற
போது
இன்றைக்கு ஏனடா என்னிடம்
கேட்கிறாய்?
இன்று போய் நாளை வா!
*****
நண்பர்களே! அப்படிச் செய்து விடாதீர்கள்!
நீங்கள் யாரைப் போல எழுதுகிறீர்கள்?
யாரைப் போலவும் எழுதாமல்
இருக்க மெனக்கெடுகிறேன்.
என்னை யாரைப் போலவும் எழுத
வைத்து விடாதீர்கள்.
*****
அவர்கள் ஏன் காணாமல் போய் விடுகிறார்கள்?
வருசத்துக்கு பதினைந்து சதவீத
வட்டி, முதலீடு செய்யுங்கள் என்று ஏகப்பட்ட வற்புறுத்தல் மற்றும் நெருக்கடி.
நான் என்ன செய்வேன் சொல்லுங்கள்.
பணம் கொடுங்கள், முதலீடு
செய்கிறேன் என்று சொல்லி விட்டேன்.
அதற்குப் பிறகு ஆட்கள் காணாமல்
போய் விடுகிறார்கள்.
*****
உங்களுக்காகவே ஒரு தத்துவம்
நல்ல ஒரு தத்துவம் சொல்ல
முடியுமா என்றார்கள்.
கெட்ட ஒரு தத்துவமும் இருக்க
முடியுமோ என்னவோ?
சொன்னால் போயிற்று என்று
சொன்னேன்.
எல்லாரும் கஷ்டத்தைத் தாண்டிதான்
வர வேண்டும்
நீங்கள் நல்லவர் என்பதற்காக
அதைத் தாண்டாமல் வர முடியாது.
எல்லாரும் கை தட்டினார்கள்.
எதற்கு என்றேன், நீங்கள்
எல்லாம் கெட்டவர்களா என்று கேட்டபடி.
இனிமேல் என்னிடம் தத்துவம்
கேட்பதில்லை என்ற முடிவோடு கலைந்து சென்று விட்டார்கள்.
*****
No comments:
Post a Comment