ஊர் பொறுக்கிப் புராணம்
சுற்றுலா சென்று வந்தால்
அது ஒரு பிரச்சனை
ஏதேதோ பொருட்களை வாங்கி வந்து
விடுகிறேன்
எதை எடுத்து எங்கே வைப்பது
ஏற்கனவே சென்று வந்த சுற்றுலாக்களில்
வாங்கி வந்த குப்பைகள்
அத்தனை அலமாரிகளிலும்
சரிதான் போ ஆனது ஆயிற்று
குப்பைத் தொட்டியில் நிரப்பலாம்
என்றால்
ஏற்கனவே நிரம்பிக் கிடக்கிறது
அது
பயணத்தைப் பழி தீர்ப்பது
போல
இனி சுற்றுலா செல்வதாக இருந்தால்
அலமாரி வைத்த புது வீடுகள்
நிறைய கட்டிக் கொள்ள வேண்டும்
கிப்ட் கொடுக்கும் பங்ஷன்கள்
நிறைய கலந்து கொள்ள வேண்டும்
இன்விடேஷன் கொடுக்கா விட்டாலும்
கூட
அழகழகு கவர்களில் சுற்றிக்
கொடுத்துக் கொண்டே இருக்க
வேண்டும்
அலமாரியின் சுத்தம் வீட்டின்
சுத்தம்
இப்போதைக்குச் சில நாட்களுக்குக்
கொஞ்சம் பொருட்கள் குறையும்
வரை
சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்ய
வேண்டாம் என்று
ஆண்டவர் சுற்றுலா நிறுவனத்திடம்
சொல்லி வைத்து விட வேண்டும்
*****
No comments:
Post a Comment