28 Feb 2022

நம்பிக்கையின் சுழற்சி

நம்பிக்கையின் சுழற்சி

மனிதர்களின் நம்பிக்கைத் துரோகங்கள் நிராசையின் பாற்பட்டவை

துரோகங்களின் நிறைவில்கிடைக்கும் மகிழ்விற்காக

வேரோடு வெட்டிச் சாய்க்கிறார்கள்

வெட்டிச் சாய்த்த பின் நிழல் தராத மரத்தைச் சபிக்கிறார்கள்

விதையோடு வீழும் மரம்

பல நூறு மரங்களாக முளைக்கும் போது

ஒவ்வொரு மரத்தையும் வெட்டி வீழ்த்த

துரோகங்கள் கோடரிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றன

கோடரிகள் ஒவ்வொரு மரமாக வீழ்த்துவதற்குள்

பெருகிப் பல்கி விடும் மரங்கள்

துரோகங்களுக்குத் தங்கள் நன்றியைச் சொல்கின்றன

வெட்டி வீழ்த்தியதில் தேய்ந்து போய்க் கிடக்கும் கோடரிகள்

மற்றொரு கோடரியைப் பிரசவிக்க முடியாமல் இறந்து விடுகின்றன

நம்பிக்கைகள் மரணத்தில் துளிர் விடுவதைப் போல

துளிர் விட முடியாத துரோகங்கள்

நம்பிக்கைகளின் காலடி மண்ணில் புதையுண்டுப் போகின்றன

நன்றியுணர்வில் நம்பிக்கையோடு சுழலும் பூமி

சுமப்பது எதையும் தூக்கி எறிந்திடாமல்

துரோகங்களையும் சுமந்தபடி சுழன்று கொண்டிருக்கிறது

*****

27 Feb 2022

அணையாமல் எரியும் நேரங்கள்

அணையாமல் எரியும் நேரங்கள்

துளி அவசரம்

நேரத்தைப் பெரிதாகப் பற்ற வைக்கிறது

கடந்து கொண்டிருக்கும் நேரம்

எரிவாயுக் கிணறெனத் தீப்பற்றி எரிகிறது

எல்லாரும் நேரத்தைப் பார்த்தபடி

ஆசுவாசமின்றி அலைகிறார்கள்

குறிப்பிட்ட நேரம் கடந்து பின்

எல்லாம் முடிகிறது

கடிகாரம் நிதானமாகச் சுழலத் தொடங்குகிறது

நிலா சாவகாசமாக வந்து நிற்கிறது

நட்சத்திரங்கள் பதற்றமின்றித் தோன்ற தொடங்குகின்றன

மறுநாள் மறுபொழுது

தீப்பற்றி எரிவதற்கென்றே

ஒதுக்கப்பட்டிருக்கின்றன சில மணி நேரங்கள்

காலக் கடிகாரத்தில் பரபரவெனச் சுழல்வதற்கென்ற

படைக்கப்பட்டிருக்கின்ற மனித முட்கள்

பெருங்காற்றில் அலைவுறும் சருகெனச் சுழலத் தொடங்குகின்றன

*****

26 Feb 2022

ஒரு துளி தித்திப்பு

ஒரு துளி தித்திப்பு

ஏதோ ஒரு கதையோ கவிதையோ

சொல்வதற்கு உன்னிடம் இருக்கிறது

ரசித்துக் கேட்பதற்கோ களிப்பூட்டிக் கொள்வதற்கோ

நேரம் இல்லாமல் களைப்பே மிஞ்சும் இரவுகளில்

தூக்கம் ஒன்றே ரசனைக்குரியதாகவும்

களிப்பூட்டிக் கொள்வதற்காகவும் உள்ளது

கனவுகளில் கதையோ கவிதையோ

நிழற்படம் போல ஓடிக் கொண்டிருக்கிறது

விடிந்ததும் மறைந்து விடும் நிலவைப் போல

கனவைக் கோர்வையாக்கும் சொற்களோ

சொற்களை வடம் பிடிக்கும் ஓர்மையோ இன்மையால்

ஓர் இலக்கியவாதியை இழக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்

ஏழரைக்கு வரும் ஒற்றைப் பேருந்தை

நடை பாதியுமாய் ஓட்டம் மீதியுமாய்

பறந்து வந்து பிடித்து

அற்றைத் தின அலுவல் மேல் ஏறுகையில்

டீ சாப்பிட்டுதானே வர்றே என்ற வாசகத்தில்

எங்கோ பட்டு எப்படியோ தெறிக்கிறது

கவிதையின் ஒரு துளி தித்திப்பு

*****

25 Feb 2022

மனப்படகின் பயணம்

மனப்படகின் பயணம்

வார்த்தைகளுக்குக் கட்டுபடாமல் நீள்கின்றன முடிவுகள்

மனதுக்கு ஒவ்வாது கசப்பைச் சுமந்த வண்ணம் நகர்கின்ற

வாழ்க்கை நதியைத் திசை திருப்ப முடியாமல்

அல்லாடுகின்றன தள்ளாடும் நம்பிக்கைகள்

எண்ணங்களின் இழுவிசை ஒவ்வொருரையும்

வெவ்வேறு விதமாய்க் கவர்ந்திழுக்க

ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் மீதும் காட்ட விழையும்

அளவிடற்கரிய அக்கறையைத் தாங்க இயலாது

மிதந்தும் மூழ்கியும் மெலெழுந்தும் ஆழ அமிழ்ந்தும்

அலைவுறுகிறது பயணித்துக் கொண்டிருக்கும் மனப்படகு

பயணங்களின் முடிவில் மற்றொரு பயணம் துவங்கும் எனினும்

ஒரு பயணத்தின் இலக்கு ஒவ்வொரு பயணத்தையும்

ஒரே மாதிரியாய் மாற்ற முனைகிறது

ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மாதிரியானது என்பதறியாது

ஒரு பயண அனுபவம் எல்லா பயணங்களையும்

ஒருமையாய்த் தீர்மானித்து அதிகாரமிடுகிறது

ஒரு பயணத்தில் நேர்ந்து விடும் விபத்து

ஒவ்வொரு பயணத்தையும் அதீத பயத்தோடு துவக்கச் செய்கிறது

நதியும் பயணமும் யாருக்கும் கட்டுப்படாமல்

நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன

ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டும்

பின் யாதொன்றுக்கும் கட்டுப்படாமலும்

திசை தெரிந்தும் திசை தப்பியும்

பலவிதமாய்ப் பயணித்துக் கொண்டிருக்கிறது மனப்படகு

*****

24 Feb 2022

ஒப்பிக்கப்படும் பேரேடுகளின் படபடப்புகள்

ஒப்பிக்கப்படும் பேரேடுகளின் படபடப்புகள்

கொள்கையோடு வாழ்ந்தது போதும் என்று

யாவற்றையும் துறக்க தயாராகையில்

தலைமுடி உதிர்ந்து கொட்டுகிறது

தாடி முடி ஒவ்வொன்றாகத் தளர்கிறது

மார்பு முடிகளும் மேனி ரோமங்களும்

ஒவ்வொன்றாக விழத் தொடங்குகின்றன

மொத்தமாய் மழிக்கப்பட்டது போன்ற உடல்

பார்வைக்கு அச்சத்தைக் கக்குகிறது

தலைமுடித் தைலம் மேனி வனப்புத் திரவியங்கள்

தங்கள் தோல்வியைச் சொல்லிப் புலம்பியபடி அமர்ந்திருக்கின்றன

தீவிரமாகக் கொள்கையைத் தொட்டுக் கொண்டதற்காக

பழுதடைந்த சிறுநீரகங்கள்

கால்களை வீங்க வைத்த கதையைச் சொல்லி விட்டு

இதய துடிப்பை நிறுத்திய அத்தியாயத்தை நிறைவு செய்தால்

வாழ்க்கை புத்தகம் வாசித்து முடிக்கப்பட்டு விடுகிறது

மற்றொரு வாழ்க்கைப் புத்தகத்தை வாசிக்க நினைக்கும் போது

ஒரே விதமான நெடி பரவி மூக்கைத் துளைக்கிறது

நாக்கு முழுவதும் காளான்கள் முளைத்து

ருசியின் சுவடுகள் மலடாகி மலையேறுகின்றன

பேரோசையோடு படபடக்கும் புத்தகத்தின் பக்கங்கள்

இசையை ஒப்பிப்பதைப் போல மாறி விட்டன

*****

23 Feb 2022

பனித்துளிக்குள் உறையும் தீப்பொறி

பனித்துளிக்குள் உறையும் தீப்பொறி

நான்கைந்து பேர் குழுமியிருந்தார்கள்

அழைப்பு விடுக்காது குறித்த நெடும்பேச்சு

முளை விடுவதற்கான அறிகுறி துளிர் விடத் தொடங்கியது

எப்படித் துவங்குவது என்ற தயக்கம்

மௌனமாய் உருக்கொண்டு உருண்டோடிக் கொண்டிருந்தது

அமைதியை உடைக்கும் குண்டை வீசுவதைப் போல

அழைத்திருக்கலாம் என்ற வார்த்தையிலிருந்து

சலனத்தைச் சரசரவென பரவும் அலையென விரிய விட்டார்கள்

அப்படியொன்றும் மாபெரும் தவற்றைப் புரியவில்லை என்ற

தடுப்புக் கவசத்தோடு சக்கர வியூகத்தின் மையத்தில் நிறுத்தும்

யுத்த தந்திரங்கள் அனைத்தையும் லாவகமாய்க் கையாண்டார்கள்

உக்கிரப் புழுதியோடு வார்த்தைக் கவிச்சி வீச வாய்ப்பிருந்த

களமாடி வேண்டிய நிலமும் பொழுதும்

தர்ம சங்கடத்தில் நிறுத்திய யாருக்கும் அழைப்பில்லை என்பதோடு

பனித்துளிக்குள் அடைபட்ட தீப்பொறியென உறைந்து போனது

*****

22 Feb 2022

நெறிமுறைகளின் தேசம்

நெறிமுறைகளின் தேசம்

விருந்தின் நிறைவில் ஒருவருக்கு உணவில்லாத போது

ஒட்டு மொத்த விருந்தின் வருத்தம் தெரியாத வண்ணம்

உணவில்லாத மனிதரை உதாசீனப்படுத்தும் படலம் தொடங்குகிறது

விருந்தின் நேர ஒழுங்கு விதந்தோதப்படுகிறது

விருந்தின் சட்ட திட்டங்கள் பெரிதாக்கப்பட்டு

மனித குறைகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன

விருந்துக்கான நேம நிஷ்டைகள் உருவாகின்றன

விருந்திற்குத் தகுந்தாற் போல்

மனிதர்கள் பொருந்திக் கொள்ள வேண்டுமென்பது

ஏகமனதாக ஏற்கப்படுகிறது

பொருந்தாத மனிதர்களுக்குப் பட்டினி என்பது

பொருத்தமான தண்டனையென சாசுவதமாகிறது

விருந்துகள் தொடர்ந்து நடைபெறத் தொடங்குகின்றன

புசித்தவர்கள் புசித்த வண்ணம் இருக்கிறார்கள்

பசித்தவர்கள் பசியோடு இருக்கிறார்கள்

விருந்தின் சட்ட நெறிமுறைகளுக்குட்பட்டு

யாவையும் ஏற்கப்படுகின்றன

*****

நுகர்வாற்றுப்படை

நுகர்வாற்றுப்படை

சிறிதினும் சிறிது கேட்கிறேன்

இந்த நுகர்வுக் கலாச்சாரத்தில்

இடமில்லை என்று அடித்து விரட்டுகிறார்கள்

விரட்டப்பட்ட வெட்கம் சுமந்து ஓடுகையில்

ஒன்றுக்கு ஒன்று இலவசம்

வாங்கிக் கொள்கிறாயா என்கிறார்கள்

இன்னொன்றைப் பராமரிக்க பணமில்லை என்றால்

கடன் விண்ணப்பத்தைக் கையில் நீட்டுகிறார்கள்

கடனைக் கட்டுவதற்கு தெம்பில்லை என்றால்

தாது புஷ்டி லேகியத்தை

மாதாந்திரத்  தவணையில் வாங்கிக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள்

கடனைக் கட்ட முடியாது போனால்

என்ன செய்வதென்று வினவுகையில்

அச்சத்தைத் தீர்ப்பது போல

தலைமுறைகளை அடகு வைக்கும் வசதி இருப்பதாக

புன்சிரிப்போடு ஆற்றுப்படுத்துகிறார்கள்

*****

God's reference

God's reference

A house where the tortoise entered spoiled

The one who raised the house saying like that

By roads that continue to rise

Inhabitant of the lower house

Amaze the world where turtles live

He was running in the soul of his mind

What he thinks that time

For humans who have survived turtles

Kneeling and he starting the prayer of thanks

In the hearts of turtles all over the world

A feel of gratitude arose and subsided

God then take this an account of note

*****

கடவுளின் குறிப்பு

கடவுளின் குறிப்பு

ஆமை புகுந்த வீடு விளங்காதென்றார்

வீட்டை உயர்த்திக் கட்டியிருந்தவர்

உயர்ந்து கொண்டே போன சாலைகளால்

தாழ்வான வீட்டில் குடியிருந்தவர்

ஆமைகள் வாழும் உலகத்தை வியப்போடு

மனக்கண்ணில் ஓடிவிட்டுக் கொண்டிருந்தார்

என்ன நினைத்தாரோ

ஆமைகளை வாழ விட்ட மனிதர்களுக்காக

மண்டியிட்டு கண்ணீர் மல்க நன்றி சொல்ல ஆரம்பித்து விட்டார்

உலகெங்கும் இருந்த ஆமைகளின் நெஞ்சில்

ஒரு சிலிர்ப்பு எழுந்து அடங்கியதாகக்

கடவுள் அப்போது குறித்துக் கொண்டார்

*****

20 Feb 2022

A tree that gives birth to the forest

A tree that gives birth to the forest

We have to plant the trees ourselves

We have to water the trees

We are the ones who have to guard the watered trees

That's exactly how many trees you plant

Water for how many trees

How many trees will you guard

Look at the forest and the wild trees

Do not cut down a wild tree

One hundred forests will grow from one wild tree

*****

பெருங்காட்டைப் பிரசவிக்கும் ஒரு மரம்

பெருங்காட்டைப் பிரசவிக்கும் ஒரு மரம்

மரங்களை நாம்தான் நட்டு வைக்க வேண்டும்

நட்டு வைத்த மரங்களுக்கு நாம்தான் நீருற்ற வேண்டும்

நீரூற்றிய மரங்களை நாம்தான் காவல் காக்க வேண்டும்

அதுசரி எத்தனை மரங்களை நடுவாய்

எத்தனை மரங்களுக்கு நீரூற்றுவாய்

எத்தனை மரங்களுக்குக் காவல் காப்பாய்

காட்டையும் காட்டு மரங்களையும் பார்

ஒரு காட்டு மரத்தை வெட்டாதிரு

ஒரு காட்டு மரத்தினின்று நூறு காடுகள் உருவாகும்

*****

Humans are needed

Humans are needed

Little by little humans became machines

When human machines ask for higher wages

Robots are created

When the age of human work is thought to be over

To manage robots

As if to spit out the ads that humans are needed

Media contacts that flash that ads

*****

மனிதர்கள் தேவை

மனிதர்கள் தேவை

கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை எந்திரங்களாக்கினர்

மனித எந்திரங்கள் அதிக கூலி கேட்பதாக

எந்திர மனிதர்களை உருவாக்கினர்

மனித வேலையின் யுகம் முடிந்து விட்டதென நினைத்த போது

எந்திர மனிதர்களை மேலாண்மை செய்ய

மனிதர்கள் தேவை என்ற விளம்பரத்தைக் கக்கியபடி

மின்னிக் கொண்டிருக்கின்ற ஊடகத் தொடர்புகள்

*****

19 Feb 2022

The nature that opens the way

The nature that opens the way

Asking for a natural way

It does not warn at any time

Nature opens up ways to be overlooked

It is the job of human beings to change and lock ways

Creating openings is the nature of nature

When floods are frightening

Ways to navigate all that nature hears

Whenever a storm blows

All nature hears are unobstructed paths for air

During earthquakes

Nature listens in ways that do not interfere with the movements

In the moments of the tsunami

All that nature hears is the ways of the shores

Ways where all the desires of nature are open

Nature opens when the ways are blocked

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...