23 Feb 2022

பனித்துளிக்குள் உறையும் தீப்பொறி

பனித்துளிக்குள் உறையும் தீப்பொறி

நான்கைந்து பேர் குழுமியிருந்தார்கள்

அழைப்பு விடுக்காது குறித்த நெடும்பேச்சு

முளை விடுவதற்கான அறிகுறி துளிர் விடத் தொடங்கியது

எப்படித் துவங்குவது என்ற தயக்கம்

மௌனமாய் உருக்கொண்டு உருண்டோடிக் கொண்டிருந்தது

அமைதியை உடைக்கும் குண்டை வீசுவதைப் போல

அழைத்திருக்கலாம் என்ற வார்த்தையிலிருந்து

சலனத்தைச் சரசரவென பரவும் அலையென விரிய விட்டார்கள்

அப்படியொன்றும் மாபெரும் தவற்றைப் புரியவில்லை என்ற

தடுப்புக் கவசத்தோடு சக்கர வியூகத்தின் மையத்தில் நிறுத்தும்

யுத்த தந்திரங்கள் அனைத்தையும் லாவகமாய்க் கையாண்டார்கள்

உக்கிரப் புழுதியோடு வார்த்தைக் கவிச்சி வீச வாய்ப்பிருந்த

களமாடி வேண்டிய நிலமும் பொழுதும்

தர்ம சங்கடத்தில் நிறுத்திய யாருக்கும் அழைப்பில்லை என்பதோடு

பனித்துளிக்குள் அடைபட்ட தீப்பொறியென உறைந்து போனது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...