26 Feb 2022

ஒரு துளி தித்திப்பு

ஒரு துளி தித்திப்பு

ஏதோ ஒரு கதையோ கவிதையோ

சொல்வதற்கு உன்னிடம் இருக்கிறது

ரசித்துக் கேட்பதற்கோ களிப்பூட்டிக் கொள்வதற்கோ

நேரம் இல்லாமல் களைப்பே மிஞ்சும் இரவுகளில்

தூக்கம் ஒன்றே ரசனைக்குரியதாகவும்

களிப்பூட்டிக் கொள்வதற்காகவும் உள்ளது

கனவுகளில் கதையோ கவிதையோ

நிழற்படம் போல ஓடிக் கொண்டிருக்கிறது

விடிந்ததும் மறைந்து விடும் நிலவைப் போல

கனவைக் கோர்வையாக்கும் சொற்களோ

சொற்களை வடம் பிடிக்கும் ஓர்மையோ இன்மையால்

ஓர் இலக்கியவாதியை இழக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்

ஏழரைக்கு வரும் ஒற்றைப் பேருந்தை

நடை பாதியுமாய் ஓட்டம் மீதியுமாய்

பறந்து வந்து பிடித்து

அற்றைத் தின அலுவல் மேல் ஏறுகையில்

டீ சாப்பிட்டுதானே வர்றே என்ற வாசகத்தில்

எங்கோ பட்டு எப்படியோ தெறிக்கிறது

கவிதையின் ஒரு துளி தித்திப்பு

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...