ஒப்பிக்கப்படும் பேரேடுகளின் படபடப்புகள்
கொள்கையோடு வாழ்ந்தது போதும்
என்று
யாவற்றையும் துறக்க தயாராகையில்
தலைமுடி உதிர்ந்து கொட்டுகிறது
தாடி முடி ஒவ்வொன்றாகத் தளர்கிறது
மார்பு முடிகளும் மேனி ரோமங்களும்
ஒவ்வொன்றாக விழத் தொடங்குகின்றன
மொத்தமாய் மழிக்கப்பட்டது
போன்ற உடல்
பார்வைக்கு அச்சத்தைக் கக்குகிறது
தலைமுடித் தைலம் மேனி வனப்புத்
திரவியங்கள்
தங்கள் தோல்வியைச் சொல்லிப்
புலம்பியபடி அமர்ந்திருக்கின்றன
தீவிரமாகக் கொள்கையைத் தொட்டுக்
கொண்டதற்காக
பழுதடைந்த சிறுநீரகங்கள்
கால்களை வீங்க வைத்த கதையைச்
சொல்லி விட்டு
இதய துடிப்பை நிறுத்திய அத்தியாயத்தை
நிறைவு செய்தால்
வாழ்க்கை புத்தகம் வாசித்து
முடிக்கப்பட்டு விடுகிறது
மற்றொரு வாழ்க்கைப் புத்தகத்தை
வாசிக்க நினைக்கும் போது
ஒரே விதமான நெடி பரவி மூக்கைத்
துளைக்கிறது
நாக்கு முழுவதும் காளான்கள்
முளைத்து
ருசியின் சுவடுகள் மலடாகி
மலையேறுகின்றன
பேரோசையோடு படபடக்கும் புத்தகத்தின்
பக்கங்கள்
இசையை ஒப்பிப்பதைப் போல மாறி
விட்டன
*****
No comments:
Post a Comment