22 Feb 2022

நெறிமுறைகளின் தேசம்

நெறிமுறைகளின் தேசம்

விருந்தின் நிறைவில் ஒருவருக்கு உணவில்லாத போது

ஒட்டு மொத்த விருந்தின் வருத்தம் தெரியாத வண்ணம்

உணவில்லாத மனிதரை உதாசீனப்படுத்தும் படலம் தொடங்குகிறது

விருந்தின் நேர ஒழுங்கு விதந்தோதப்படுகிறது

விருந்தின் சட்ட திட்டங்கள் பெரிதாக்கப்பட்டு

மனித குறைகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன

விருந்துக்கான நேம நிஷ்டைகள் உருவாகின்றன

விருந்திற்குத் தகுந்தாற் போல்

மனிதர்கள் பொருந்திக் கொள்ள வேண்டுமென்பது

ஏகமனதாக ஏற்கப்படுகிறது

பொருந்தாத மனிதர்களுக்குப் பட்டினி என்பது

பொருத்தமான தண்டனையென சாசுவதமாகிறது

விருந்துகள் தொடர்ந்து நடைபெறத் தொடங்குகின்றன

புசித்தவர்கள் புசித்த வண்ணம் இருக்கிறார்கள்

பசித்தவர்கள் பசியோடு இருக்கிறார்கள்

விருந்தின் சட்ட நெறிமுறைகளுக்குட்பட்டு

யாவையும் ஏற்கப்படுகின்றன

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...