22 Feb 2022

நுகர்வாற்றுப்படை

நுகர்வாற்றுப்படை

சிறிதினும் சிறிது கேட்கிறேன்

இந்த நுகர்வுக் கலாச்சாரத்தில்

இடமில்லை என்று அடித்து விரட்டுகிறார்கள்

விரட்டப்பட்ட வெட்கம் சுமந்து ஓடுகையில்

ஒன்றுக்கு ஒன்று இலவசம்

வாங்கிக் கொள்கிறாயா என்கிறார்கள்

இன்னொன்றைப் பராமரிக்க பணமில்லை என்றால்

கடன் விண்ணப்பத்தைக் கையில் நீட்டுகிறார்கள்

கடனைக் கட்டுவதற்கு தெம்பில்லை என்றால்

தாது புஷ்டி லேகியத்தை

மாதாந்திரத்  தவணையில் வாங்கிக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள்

கடனைக் கட்ட முடியாது போனால்

என்ன செய்வதென்று வினவுகையில்

அச்சத்தைத் தீர்ப்பது போல

தலைமுறைகளை அடகு வைக்கும் வசதி இருப்பதாக

புன்சிரிப்போடு ஆற்றுப்படுத்துகிறார்கள்

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...