28 Feb 2022

நம்பிக்கையின் சுழற்சி

நம்பிக்கையின் சுழற்சி

மனிதர்களின் நம்பிக்கைத் துரோகங்கள் நிராசையின் பாற்பட்டவை

துரோகங்களின் நிறைவில்கிடைக்கும் மகிழ்விற்காக

வேரோடு வெட்டிச் சாய்க்கிறார்கள்

வெட்டிச் சாய்த்த பின் நிழல் தராத மரத்தைச் சபிக்கிறார்கள்

விதையோடு வீழும் மரம்

பல நூறு மரங்களாக முளைக்கும் போது

ஒவ்வொரு மரத்தையும் வெட்டி வீழ்த்த

துரோகங்கள் கோடரிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றன

கோடரிகள் ஒவ்வொரு மரமாக வீழ்த்துவதற்குள்

பெருகிப் பல்கி விடும் மரங்கள்

துரோகங்களுக்குத் தங்கள் நன்றியைச் சொல்கின்றன

வெட்டி வீழ்த்தியதில் தேய்ந்து போய்க் கிடக்கும் கோடரிகள்

மற்றொரு கோடரியைப் பிரசவிக்க முடியாமல் இறந்து விடுகின்றன

நம்பிக்கைகள் மரணத்தில் துளிர் விடுவதைப் போல

துளிர் விட முடியாத துரோகங்கள்

நம்பிக்கைகளின் காலடி மண்ணில் புதையுண்டுப் போகின்றன

நன்றியுணர்வில் நம்பிக்கையோடு சுழலும் பூமி

சுமப்பது எதையும் தூக்கி எறிந்திடாமல்

துரோகங்களையும் சுமந்தபடி சுழன்று கொண்டிருக்கிறது

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...