27 Feb 2022

அணையாமல் எரியும் நேரங்கள்

அணையாமல் எரியும் நேரங்கள்

துளி அவசரம்

நேரத்தைப் பெரிதாகப் பற்ற வைக்கிறது

கடந்து கொண்டிருக்கும் நேரம்

எரிவாயுக் கிணறெனத் தீப்பற்றி எரிகிறது

எல்லாரும் நேரத்தைப் பார்த்தபடி

ஆசுவாசமின்றி அலைகிறார்கள்

குறிப்பிட்ட நேரம் கடந்து பின்

எல்லாம் முடிகிறது

கடிகாரம் நிதானமாகச் சுழலத் தொடங்குகிறது

நிலா சாவகாசமாக வந்து நிற்கிறது

நட்சத்திரங்கள் பதற்றமின்றித் தோன்ற தொடங்குகின்றன

மறுநாள் மறுபொழுது

தீப்பற்றி எரிவதற்கென்றே

ஒதுக்கப்பட்டிருக்கின்றன சில மணி நேரங்கள்

காலக் கடிகாரத்தில் பரபரவெனச் சுழல்வதற்கென்ற

படைக்கப்பட்டிருக்கின்ற மனித முட்கள்

பெருங்காற்றில் அலைவுறும் சருகெனச் சுழலத் தொடங்குகின்றன

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...