29 Sept 2018

சிம்.எம் - மோ, பி.எம் - மோ ஆக


நோட்டா ஜெயிக்க வேண்டும். ஜெயித்து எம்.எல்.ஏ - வோ, எம்.பி - யோ ஆக வேண்டும். அப்புறம் சிம்.எம் - மோ, பி.எம் - மோ ஆக வேண்டும்.
*****
கலை எனக்குப் பிடிக்கும் என்றால்... கலையரசியையா? கலைச்செல்வியையா? எனக் கேட்கக் கூடாது. ஏனென்றால் கலை எனக்குப் பிடிக்கும்.
*****
எல்லா விவரமும் சரியா இருந்தாத்தான் கேட்டதைக் கொடுப்பாங்களாம்
யாருப்பா என்னுடைய விவரங்களை என்னைக் கேட்காம தப்பா பதிஞ்சது
*****
நாட்டுல படிச்சவங்களே படிச்ச ஆபிசர்ஸ் கேட்குற விவரங்களைக் கொடுக்க முடியறதில்ல
படிக்காதவங்க என்னப் பண்ணுவாங்க
படிக்கிறதனால எல்லாம் மாற்றம் வந்துடப் போவதில்ல
படிச்ச ஆபிசர்ஸ்கிட்ட மாற்றம் வந்தாத்தான் உண்டு
*****
பயத்துக்குத்தான் மனுசன் வேலை செய்றான்
பயத்துக்குத்தான் மனுசன் நேர்மையா இருக்கிறான்
பயம்னு ஒண்ணு இல்லாட்டி இந்த மனுசப் பயலை ஒண்ணும் பண்ண முடியாது
*****

குறை நாக்குகள்


குறை நாக்குகள்
காலத்தின் ஆகப் பெரும் சோம்பேறி
கவிதையோடு மட்டும் பேசுவான்
நினைத்தால் நாவல்கள் எழுதித் தள்ளுவான்
சிறுகதையோடு முடிந்துப் போவதும் உண்டு
வார்த்தைகளின் வசீகரத்தில்
மயங்கிப் போனக் கிறுக்கன்
பைத்தியமாய் அலைவதில் தனிசுகம்
உங்களுக்குப் பிடிக்காதுதான்
காசுக்காக ஏசுவையும் விற்ற நீங்கள் இருக்கும் போது
அப்படி ஒரு பிறவி இருந்து விட்டுப் போகட்டும்
குறை சொன்ன நாக்குகளைக் கடித்துத் துப்பிப் போடுங்கள்
*****

28 Sept 2018

பக்கா பென்சிங் அன்ட் ரூப்பிங்


ஒரு மோசமான கிராமத்துச் சாலையைப் பார்த்தவுடன்
என்ன புரிந்து கொள்வீர்கள்
அது
தனியார் பள்ளிப் பேருந்துகள் வராத சாலை என்றா
*****
மச்சி நீ சிரிக்காட்டி என்ன
உன் மண்டையோடு சிரிக்கும் போ
*****
ஏன்டா சபிக்கிறே என்றேன்.
முடியாதவன் வேற என்ன பண்ண முடியும் என்கிறான்.
*****
சோளக்காட்டு பொம்மை எங்கே
எல்லாம் பக்கா பென்சிங் அன்ட் ரூப்பிங்
*****
சமயத்துல ஹன்சிகாவைப் பார்க்கையில
பூமிகாவைப் பார்க்கிற மாதிரி இருக்கு என்றேன்
எனக்கு சரோஜாதேவியைப் பார்க்குற மாதிரி இருக்கு என்றார் தாத்தா
அவரவர்க்கு அவரவர் பார்வை
*****

பிரபல்யத்திற்குப் போட்டிகள் வேண்டும்

பிரபல்யத்திற்குப் போட்டிகள் வேண்டும்
போட்டிகளை எதிர்கொண்டு
புளித்து விட்டது
சவால்களை ஏற்று
சலித்து விட்டது
இதில் ரைமிங் பார்க்காதே
தவறி விடுவாய்
ஸ்லோ ரேஸ் ரொம்பப் பிடித்தம்
நீ சவால் விடாதே
போட்டியிடாதே
தோற்று விடுவாய்
மெல்ல ஓடுவது எளிதல்ல
இதற்குப் பயிற்சி செய்யாதே
எடுத்தப் பயிற்சிகளை வாந்தியெடுக்க வேண்டும்
அதனால்தான் சொல்கிறேன்
நீ பழகி விட்டாய்
கற்றுக் கொள்ளாமல் இருப்பது சாத்தியமில்லை
பழக்கத்தை விட முடியாது
பழக்கம் பிடிக்காது எனக்கு
துப்பி விடுவேன்
துப்ப முடியுமா உன்னால்
எச்சில் சேதாரமாகி விடும் என்று நினைப்பவனே.
*****

27 Sept 2018

ஒரிஜினலோ டூப்ளிகேட்டோ


ஏரிகள் இருந்ததற்கான சாட்சியங்கள்
லேக் வியூ அபார்ட்மெண்ட்கள்
*****
ர்ச்சனை செய்
அலகு குத்து
காவடி எடு
உள்ளே இருக்கும் சிலை
ஒரிஜினலோ டூப்ளிகேட்டோ
*****
கொள்கை இல்லாமல் கட்சி நடத்த முடியாது.
ஆனால்,
அந்த கொள்கைளை வைத்துக் கொண்டெல்லாம் கட்சி நடத்த முடியாது.
*****
35 வயதில் பாதி நரைத்து
சவரம் செய்வதற்கு அலுப்புப் படுவதையும்
பாசிட்டிவாகப் பேசும் மக்கள் இருக்கிறார்களே
சால்ட் அன்ட் பெப்பர் லுக் என்று
யாம் நல்ல சமூகத்தில்தான் வாழ்கிறோம்
*****
ஆற்றில் தண்ணீர் வுட்டதால்தானே அணை உடைஞ்சது
அதனால
இனி தண்ணீர் விட மாட்டேன் என்று சொல்லிடப் போறான் கார்நாடகக்காரன்
*****

சூட்சமங்கள்


வாழ்வு
விருப்பம் போல் இருப்பதுதான் வாழ்வு
அடுத்த கணம் பற்றி
சத்தியமாகத் தெரியாது
அதனாலென்ன
விருப்பம் போல் இருப்பதுதான் வாழ்வு
*****
கொஞ்சம் அதிகம்
உதைபடும் பந்துக்கு
கைதட்டல்
அதிகம்

திசை தெரிந்தோடியும் பிரயோஜனம் உண்டா?
அடிப்பவனுக்கு வேண்டும் அக்கறை
எட்டுத் திக்கும் ஓடும் பந்து
*****
சூட்சமங்கள்
மேலதிகமாக எனக்குத் தெரியவில்லை
அதற்காக வெட்கப்படச் சொல்கிறாய்
உனக்காக வெட்கப்படுகிறேன்
தெரிந்து வைத்திருப்பதால்
புரிந்து விடுபவைகளல்ல சூட்சமங்கள்
*****

26 Sept 2018

சினிமாவில் மட்டும் சுவர் உடையும்


எதிர்ப்பிலேயே வாழுங்கள் - கலைஞருக்குப் பொருந்தும்.
*****
மண்டையைக் கொண்டு போய் சுவரில் மோதினால் மண்டைதானே உடையும். தமிழ் சினிமாவில் மட்டும் சுவர் உடையும்.
*****
இறப்பைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டால், அசாதாரணமாக பேய், பிசாசு, ஆத்மாக்களை உருவாக்க வேண்டியிருக்காது.
*****
கஷ்டம் தனிமையில் சந்தோசமாக இருப்பது.
முடியுமானால் அவ்வளவுதான் வாழ்க்கை
அதற்கு மேல் ஒன்றுமில்லை
பூச்சியம்
*****
ஏரிகள் அழிந்து விட்டன என்று யார் சொன்னது? சிறுமழை பெய்தாலும் ஏரி போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலைகளே நம் அழியாத ஏரிகள்.
*****

கணக்குகள் காலத்திடம் செல்லாது

கணக்குகள் காலத்திடம் செல்லாது
மாறி மாறி வரும் ஆணவம்
தான் எனும் நினைப்பு
எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் குத்தும் காலம்
காற்று
அலை
வீசிக் கொண்டே இருக்கும்
ஆணவமில்லாதவைகள்
மலை
கடல்
ஒரு பொருட்டா
மலை கடலாகும்
கடல் மலையாகும்
விட்டுக்கொடுத்தல் சுகம்
அவரவருக்கு அவரவரிலிருந்து
பார்வையைத் திருப்புவது
ஏனோ கஷ்டம்
எப்படியோ வாழ்ந்து
செத்துப் போம்
கணக்கில் வராது
உம் ஆதாயக் கணக்குகள்
*****

25 Sept 2018

அதாம்லே கண் திருஷ்டி


ஹீரோவாக நடித்தால் ஹீரோயினைக் கட்டிப் பிடித்து டான்ஸ் ஆட வேண்டும். மனைவி கோபிப்பாள் அல்லவா! ஆகவே சினிமாவில் வில்லனாக நடிக்க ஆசை என்றேன் அவளிடம். நிஜத்தில் அப்படித்தான் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கெளண்டர் கொடுத்தாள் அவள். மனைவி ஒரு நல்ல கண்ணாடி.
*****
பிரியாணிக்காக ரெண்டு குழந்தைகளைக் கொல்வாள் தாய் என்றதற்கு, அதற்கு மகாபாரதத்தில் ரெபரன்ஸ் இருக்கிறது என்கிறார் நம் ஆராய்ச்சி நண்பர் ஒருவர். அந்த கங்கையில முழுகிதாம்லே உம்ம பாவத்தைக் கழுவணும். அதாவது அந்த கங்கையில...
*****
உடைஞ்சதையே அடைக்கத் தெரியலியே! நீங்கலாம் எப்படிலே புதுசு கட்டுவீய்யே!
*****
கடலில் கலப்பதெல்லாம் கர்நாடகாவின் உபரி நீர்தாம்லே. அதாம்லே அதை கடைமடைக்குக் கூட விடாம கடலுக்கு விடுறோம். அவ்வளவு ரோஷக்காரப் பயலுகல்ல நாம!
*****
முக்கொம்பு மேலணை உடைஞ்சதுக்குக் கண் திருஷ்டிதான் காரணமாயிடுச்சுலே. அவ்வளவு அணைகளைக் கட்டுன கர்நாடகக்காரன் மேல விழாத திருஷ்டி, ஒரு அணையைக் கூட கட்டாத நம் மேல விழுந்துச்சு பாருல்லே! அதாம்லே கண் திருஷ்டி!
*****

முகச் சிதறல்

முகச் சிதறல்
மூடிச் செல்லும்
முகத்திரைக்குள் இல்லை முகம்
இல்லையென்று தெரிந்த
இல்லாத ஒரு முகம்
இப்படி இருக்குமோ
அப்படி இருக்குமோ என
பலவிதமாகப் பிரதிபலிக்கிறது
எதிரொளிப்பு விதியையும்
ஒளிச்சிதறல் கோட்பாட்டையும் படித்து விட்டு
முகத்திரை இட்டுச் செல்லுங்கள்
உங்கள் முகம் அழகானது என
கற்பிதம் செய்து கொள்பவர்கள்
அதிகமாவார்கள்
*****

24 Sept 2018

நேர்மையை வரலாறு விரும்பும்


கால வரையறைதான் உங்கள் பிரச்சனை என்றால் உங்கள் இலக்கை அடைவதற்கான கால வரையறையை நீண்ட காலமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அதுதான் தொலைநோக்குப் பார்வை.
*****
லவ்வராக இருந்த வரை லேட் ஓ.கே! பேமிலி ஆகி விட்டால் ப்ளீஸ் டைம் கீப் அப் பண்ணுங்க. மிடியலடா சாமி!
*****
எதிரிகளை ரத்தம் சொட்ட சொட்ட வேட்டையாடுவது ஓல்டு ஸ்டைல். கண்டுகிடாம விட்டு விடுவதுதான் நியூ ஸ்டைல்.
*****
உங்கள் நேர்மையை வரலாறு விரும்பும். வேறு யாரும் விரும்ப மாட்டார்கள்.
*****
என்னை மிரட்டுறாங்க பாஸ்!
அப்படியா! போலீஸ்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுங்க பாஸ்!
போலீஸையும் மிரட்டுறாங்க பாஸ்!
*****

மன்னித்து விடு புகைப்படமே!

மன்னித்து விடு புகைப்படமே!
காலத்தை ஒளித்து வைத்திருக்கும்
புகைப்படத்திடம் செல்லக் கோபம் எனக்கு
அதைச் சீண்டுகிறேன்
அந்தக் கோணம் இப்படி இருந்திருந்தால்
இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று
குறை சொல்கிறேன்
தலையில் ஒரு குட்டு வைக்கிறேன்
புகைப்படத்தில் இருக்கும்
ஒவ்வொருவரின் கன்னம் கிள்ளிப் பார்க்கிறேன்
கிள்ளி வைக்கிறேன்
எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும்
புகைப்படம் பேராச்சர்யம்
காலத்தின் பேரமைதிக்குப் பின்
நீ போடா தூசி என்பதாகச் சிரிக்கும்
நானும் சிரிக்கிறேன்
மண்டியிட்டு தோல்வியை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்
மதிப்பிட்டதற்காக என் மன்னிப்பைக் கொருகிறேன்
*****

22 Sept 2018

குஜால் வாழ்க்கை


ச்சுமூகமாக ய்இருக்க ச்சமூகத்தில் வ்வாய்ப்புகள் ய்இருக்க வ்வேண்டும். (ச்சும்மா ர்ரைமிங்கிற்காக)
*****
இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் மேல் இருக்கின்ற பற்றை விடாத வரை ஜனநாயகம் முக்தி பெற முடியாது. அதற்காக (அதாவது இரண்டாயிரம் நோட்டின் மீது இருக்கின்ற பற்றை விட வேண்டும் என்பதற்காக) ஐயாயிரம் ரூபாய் நோட்டை அச்சடித்து விடக் கூடாது.
*****
ரசுப் பள்ளிகளை மூடினால்தான் தனியார் பள்ளிகளைத் திறக்க முடியும். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பவர்களே! அப்புறம் தட்டுங்கள் திறக்கப்படும் என்பதெல்லாம் கதைக்கு ஆகாது. காசைக் கொட்டுங்கள் திறக்கப்படும் என்பதுதான் சாசுவதம் ஆகும்.
*****
காசிருந்தால் ஜெயில் வாழ்க்கை குஜால் வாழ்க்கைதான். காசில்லாவிட்டால் பெயில் வாழ்க்கையும் பேஜார் வாழ்க்கைதான்.
*****
வருங்காலம் இப்படி எழுதும்... ஒரு காலத்தில் மழைக்கு ஒதுங்க அரசுப் பள்ளிகள் இருந்தன. இப்போது காசிருந்தால் அண்ணாந்து பார்க்க தனியார் பள்ளிகள் மட்டுமே இருக்கின்றன.
*****

குழந்தையாகிய நான்

குழந்தையாகிய நான்
கவிதையில் மயங்கிச் சரியும்
கோழைக் குழந்தை நான்
இல்லையோ
கவிதையில் எழுச்சிக் கொள்ளும்
வீரக் குழந்தை நான்
என்னக் குழந்தையோ
நீங்களே சொல்லுங்கள்
என்னக் குழந்தை நான்
குழந்தையில் என்ன
அந்தக் குழந்தை
இந்தக் குழந்தை
குழந்தை நான்
என்னக் குழந்தை நான்?
*****

21 Sept 2018

பிரமாண்டப் பேச்சுகளின் மொமண்ட்ஸ்


நல்ல மனிதர்கள் நாட்டில் புழங்கும் சில கதைகளில் இருக்கிறார்கள்.
*****
அமைதி என்பது தைரியமாக ஸ்மார்ட்போனை ஏர்ப்ளேன் மோடிலோ, சைலண்ட் மோடிலோ போடுவது.
*****
புரிந்து கொள்ள முடியாததை அமானுஷ்யமாகப் பேசிக் கடப்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? தட் பிரமாண்டப் பேச்சுகளின் மொமண்ட்ஸ்.
*****
எட்டு வழிச் சாலை என்கிறார்கள். அதில் பைக் ஓட்டிச் செல்ல பெட்ரோல் வாங்க காசிருக்குமா எனத் தெரியவில்லை.
*****
பணம் பாதாளம் வரைக்கும் பாயும் போது, சிறைச்சாலை வரைக்கும் பாயாதா என்றெல்லாம் யோசிப்பதை விட, அந்தச் சிறைச்சாலைச் சோதனையில் பிடிபட்டதில் பிரியாணி அரிசியும் இருந்ததுதான் சுவாரசியம் என்பதை யோசிக்க வேண்டும்.
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...