ஹீரோவாக நடித்தால் ஹீரோயினைக் கட்டிப் பிடித்து டான்ஸ் ஆட
வேண்டும். மனைவி கோபிப்பாள் அல்லவா! ஆகவே சினிமாவில் வில்லனாக நடிக்க ஆசை என்றேன்
அவளிடம். நிஜத்தில் அப்படித்தான் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கெளண்டர் கொடுத்தாள்
அவள். மனைவி ஒரு நல்ல கண்ணாடி.
*****
பிரியாணிக்காக ரெண்டு குழந்தைகளைக் கொல்வாள் தாய் என்றதற்கு,
அதற்கு மகாபாரதத்தில் ரெபரன்ஸ் இருக்கிறது என்கிறார் நம் ஆராய்ச்சி நண்பர் ஒருவர்.
அந்த கங்கையில முழுகிதாம்லே உம்ம பாவத்தைக் கழுவணும். அதாவது அந்த கங்கையில...
*****
உடைஞ்சதையே அடைக்கத் தெரியலியே! நீங்கலாம் எப்படிலே புதுசு கட்டுவீய்யே!
*****
கடலில் கலப்பதெல்லாம் கர்நாடகாவின் உபரி நீர்தாம்லே. அதாம்லே
அதை கடைமடைக்குக் கூட விடாம கடலுக்கு விடுறோம். அவ்வளவு ரோஷக்காரப் பயலுகல்ல நாம!
*****
முக்கொம்பு மேலணை உடைஞ்சதுக்குக் கண் திருஷ்டிதான் காரணமாயிடுச்சுலே.
அவ்வளவு அணைகளைக் கட்டுன கர்நாடகக்காரன் மேல விழாத திருஷ்டி, ஒரு அணையைக் கூட கட்டாத
நம் மேல விழுந்துச்சு பாருல்லே! அதாம்லே கண் திருஷ்டி!
*****
No comments:
Post a Comment