நல்ல மனிதர்கள்
நாட்டில் புழங்கும் சில கதைகளில் இருக்கிறார்கள்.
*****
அமைதி என்பது
தைரியமாக ஸ்மார்ட்போனை ஏர்ப்ளேன் மோடிலோ, சைலண்ட் மோடிலோ போடுவது.
*****
புரிந்து கொள்ள
முடியாததை அமானுஷ்யமாகப் பேசிக் கடப்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? தட் பிரமாண்டப்
பேச்சுகளின் மொமண்ட்ஸ்.
*****
எட்டு வழிச்
சாலை என்கிறார்கள். அதில் பைக் ஓட்டிச் செல்ல பெட்ரோல் வாங்க காசிருக்குமா எனத் தெரியவில்லை.
*****
பணம் பாதாளம்
வரைக்கும் பாயும் போது, சிறைச்சாலை வரைக்கும் பாயாதா என்றெல்லாம் யோசிப்பதை விட,
அந்தச் சிறைச்சாலைச் சோதனையில் பிடிபட்டதில் பிரியாணி அரிசியும் இருந்ததுதான் சுவாரசியம்
என்பதை யோசிக்க வேண்டும்.
*****
No comments:
Post a Comment