வாழ்வு
விருப்பம்
போல் இருப்பதுதான் வாழ்வு
அடுத்த
கணம் பற்றி
சத்தியமாகத்
தெரியாது
அதனாலென்ன
விருப்பம்
போல் இருப்பதுதான் வாழ்வு
*****
கொஞ்சம் அதிகம்
உதைபடும்
பந்துக்கு
கைதட்டல்
அதிகம்
திசை
தெரிந்தோடியும் பிரயோஜனம் உண்டா?
அடிப்பவனுக்கு
வேண்டும் அக்கறை
எட்டுத்
திக்கும் ஓடும் பந்து
*****
சூட்சமங்கள்
மேலதிகமாக
எனக்குத் தெரியவில்லை
அதற்காக
வெட்கப்படச் சொல்கிறாய்
உனக்காக
வெட்கப்படுகிறேன்
தெரிந்து
வைத்திருப்பதால்
புரிந்து
விடுபவைகளல்ல சூட்சமங்கள்
*****
No comments:
Post a Comment