எதிர்ப்பிலேயே வாழுங்கள் - கலைஞருக்குப் பொருந்தும்.
*****
மண்டையைக்
கொண்டு போய் சுவரில் மோதினால் மண்டைதானே உடையும். தமிழ் சினிமாவில் மட்டும் சுவர்
உடையும்.
*****
இறப்பைச் சாதாரணமாக
எடுத்துக் கொண்டால், அசாதாரணமாக பேய், பிசாசு, ஆத்மாக்களை உருவாக்க வேண்டியிருக்காது.
*****
கஷ்டம் தனிமையில்
சந்தோசமாக இருப்பது.
முடியுமானால்
அவ்வளவுதான் வாழ்க்கை
அதற்கு மேல்
ஒன்றுமில்லை
பூச்சியம்
*****
ஏரிகள் அழிந்து
விட்டன என்று யார் சொன்னது? சிறுமழை பெய்தாலும் ஏரி போல் தண்ணீர் தேங்கி நிற்பதால்
சாலைகளே நம் அழியாத ஏரிகள்.
*****
No comments:
Post a Comment