24 Sept 2018

மன்னித்து விடு புகைப்படமே!

மன்னித்து விடு புகைப்படமே!
காலத்தை ஒளித்து வைத்திருக்கும்
புகைப்படத்திடம் செல்லக் கோபம் எனக்கு
அதைச் சீண்டுகிறேன்
அந்தக் கோணம் இப்படி இருந்திருந்தால்
இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று
குறை சொல்கிறேன்
தலையில் ஒரு குட்டு வைக்கிறேன்
புகைப்படத்தில் இருக்கும்
ஒவ்வொருவரின் கன்னம் கிள்ளிப் பார்க்கிறேன்
கிள்ளி வைக்கிறேன்
எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும்
புகைப்படம் பேராச்சர்யம்
காலத்தின் பேரமைதிக்குப் பின்
நீ போடா தூசி என்பதாகச் சிரிக்கும்
நானும் சிரிக்கிறேன்
மண்டியிட்டு தோல்வியை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்
மதிப்பிட்டதற்காக என் மன்னிப்பைக் கொருகிறேன்
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...