22 Sept 2022

அப்பாவின் கைபேசி

அப்பாவின் கைபேசி

பழைய மாடல் நோக்கியா போன்தான்

அப்பாவுக்குப் பிடித்திருக்கிறது

அப்பாவுக்குப் பிடிக்கிறது என்பதற்காக

எத்தனை முறை ரிப்பேர் செய்வது என்று

கடைக்காரன் அலுத்துக் கொள்கிறான்

வேண்டுமானால் அப்பாவிடம் பேசிப் பார்க்கவா என்கிறான்

கிரகம் அப்படியென்றால் தடுப்பதற்கு நான் யார்

நீயாச்சு அப்பாவாச்சு என்றேன்

கடைக்காரன் பேசிப் பார்த்திருக்கிறான்

அப்பா ஒரே போடாகப் போட்டிருக்கிறார்

போடு என்றால் அந்தப் போடில்லை

நிஜமாகவேப் போட்டிருக்கிறார்

நோக்கியா போன் அப்படியே இருந்திருக்கிறது

கடைக்காரனின் டச் போன் சுக்கு நூறாகியிருக்கிறது

மறுமுறை கடைக்காரனைப் பார்த்த போது

அப்பாவிடம் பேச வேண்டாம் என்று

நீங்கள் தடுத்திருக்கலாம் சார் என்றான்

நான்தான் சொன்னேனே

கிரகம் அப்படியென்றால் தடுப்பதற்கு நான் யார் என்றேன்

நீங்கள் சொன்னால் கேட்க வேண்டும் என்றான்

நல்லதாகப் போயிற்று

சீக்கிரம் போனை ரிப்பேர் செய்து கொடுத்து விடு என்றேன்

அப்பாவை வரச் சொல்லாமல்

நீங்களே சிரமம் பார்க்காமல் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றான்

அதற்கென்ன வாங்கிக் கொண்டால் போயிற்று

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...