18 Sept 2022

திருமணத்திற்கு முன்னும் பின்னுமான உளவியல் மாற்றம்

திருமணத்திற்கு முன்னும் பின்னுமான உளவியல் மாற்றம்

ஒரு குழந்தை பிறக்கும் வரைதான் உங்கள் மனைவியிடம் நீங்கள் ஒரு தோழமையை எதிர்பார்க்க முடியும். அதுவரை நீங்கள் ஒரு தோழரைப் போல, துணைவரைப் போல, காதலரைப் போல, இணையரைப் போல இது போன்ற வெறென்ன சொற்கள் இருந்தாலும் அப்படியெல்லாம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இருந்திருக்க முடியும். உங்கள் மனைவியும் அப்படியெல்லாம் நடந்து கொள்ள அனுமதிப்பார்.

ஒரு குழந்தை பிறந்து விட்டால் அதன் பிறகு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் வகித்து வந்து தோழர், துணைவர், இணையர், காதலர் என்ற இருப்புகளிலிருந்து நீங்கள் தூக்கியடிக்கப் படுவீர்கள்.

ஒரு குழந்தை பிறப்புக்குப் பிறகு எந்த ஒரு பெண்ணும் ஒரேயொரு பாத்திரத்தை மட்டும்தான் வகிக்க விரும்புகிறாள். அதுதான் தாய்மை என்னும் பாத்திரம்.

உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் உங்கள் மனைவிக்கு கணவராகிய நீங்கள்தான் இரண்டாம் குழந்தை. ஒருவேளை உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தால் கணவராகிய நீங்கள் மூன்றாம் குழந்தையாகி விடுவீர்கள். அதுவே மூன்று குழந்தைகள் இருந்தால் நீங்கள்தான் நான்காம் குழந்தை.

ஒரு குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு பெண்ணும் தன் கணவரை இன்னொரு குழந்தையாக ஆக்கி விடுகிறார்கள். நீங்களும் அவர்களுக்கு ஒரு குழந்தையாகத்தான் இருந்தாக வேண்டும்.

ஒரு தந்தையான பிறகு உங்கள் மனைவியிடம் பழைய இணையான தன்மைகள் எதையும் வெளிப்படுத்த இயலாது. ஒரு குழந்தையிடம் காட்டும் கண்டிப்போடும் பொறுப்போடும்தான் அதன் பிறகு மனைவி தன் கணவரை அணுகுகிறாள்.

ஒரு தாய் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாளோ அப்படித்தான் கணவரும் தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் எதிர்பார்க்கிறாள்.

ஒரு பெண்ணிடம் நடக்கும் இந்த உளவியல் மாற்றத்தை ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின் ஒவ்வொரு ஆணும் புரிந்து கொள்வது நல்லது. அதன் பிறகு ஒவ்வோர் ஆணும் குழந்தையாக நடந்து கொள்ளவும் சங்கடப்படக் கூடாது. அதில் ஓர் அழகியலும் இனிமையும் அடங்கியிருக்கிறது.

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...