18 Sept 2022

பாத்தியப்படாதவர்கள்

பாத்தியப்படாதவர்கள்

சொத்து பிரிப்பதில் தாத்தா கில்லாடி

அவரே பிறந்த ஊரை விட்டு

சொத்தைப் பிரித்துக் கொண்டு வந்தவர்தான் என்று

ஆளாளுக்கு அவர் காதில் படாமல் சொல்வார்கள்

நான்கு பிள்ளைகள் பிறந்த போதே

மூத்தவனுக்கு ரெண்டாமவனுக்கு

மூன்றாவமவனுக்கு நான்காமவனுக்கு என்று

ஆளாளுக்கு இடம் வாங்கி மச்சு வீடு கட்டி

சாசனம் செய்து வைத்து விட்டார்

சாவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே

செத்த பின்பு எந்தப் பிரச்சனையும் வரக் கூடாதென்று

நான்கு பிள்ளைகளும் நான்கு திசையில்

நான்கு தேசத்திற்கு வேலைக்குப் போனதில்

பிள்ளைகளுக்குக் கட்டிய வீட்டில்

வாடகைக்கு வந்தவர்கள் அனுபவம் செய்தார்கள்

தாத்தா செத்து கருமாதி முடிவதற்குள்

நான்கு பிள்ளைகளும் நான்கு வீடுகளையும்

வாடகைக்கு இருந்தவர்களுக்கே விற்று விட்டு

நான்கு தேசங்களுக்கும் பறந்து போனார்கள்

முப்பதுக்கு படைத்த நாளன்று

நான்கு பிள்ளைகளின் நான்கு வீடுகளிலும்

எந்த வீட்டிலும் எந்த பிள்ளையும் இல்லாததைப் பார்த்து

தாத்த என்ன நினைத்திருப்பாரோ

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...