ஏன் அறிவுரை சொல்கிறீர்கள்?
நீங்கள் உங்களுக்குதான் அறிவுரை
கூறிக் கொள்ள வேண்டும். சுற்றியிருப்பவர்களுக்கு அல்ல.
நீங்கள் ஏன் மற்றவர்களுக்கு
அறிவுரை கூற நினைக்கிறீர்கள்? நீங்கள் மற்றவர்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்க நினைக்கிறீர்கள்.
உங்களிடம் எந்த விதமான மாற்றத்தையும் எதிர்பார்க்க நினைக்கவில்லை.
உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த
நினைத்தால் நீங்கள் உங்களுக்குத்தான் அறிவுரையைச் சொல்லிக் கொள்ள வேண்டும்.
உங்களிடம் ஒரு மாற்றத்தை
உருவாக்கிப் பாருங்கள். அது மற்றவர்களிடமும் மாற்றத்தை உருவாக்கும். அந்த மாற்றத்தை
உருவாக்க நீங்கள் எந்த மெனக்கெடலையும் செய்ய வேண்டியிருக்காது.
மாற்றம் என்பதை நீங்கள் உங்களிடம்
உருவாக்கி விட்டால் அது கண்டபடி பிரதிபலிக்கும். அதை நீங்கள் அறிவுரையாகக் கூற வேண்டியதில்லை.
பிரச்சாரமாகக் கொண்டு போக வேண்டியதில்லை.
நம் ஒவ்வொருவரிடமும் மறைந்திருக்கும்
மோசமான குணங்களின் பிரதிபலிப்புகளே மற்றவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்று உந்தித்
தள்ளுகிறது.
ஒவ்வொருவரும் தங்களின் மோசமான
குணங்களை மாற்றிக் கொண்டால் யாரும் யாருக்கும் அறிவுரை சொல்ல தேவையிருக்காது.
இப்போது உங்களுக்கு நான்
சொல்வது சரியென்று தோன்றுகிறதா? அதனால்தான் நான் சொல்கிறேன் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்.
பாடநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் அறிவுரைகளே போதுமானது. இந்தச் சமூகத்தால் சொல்லப்பட்டிருக்கும்
அறிவுரைகளே போதுமானது.
நீங்கள் அந்த அறிவுரைகளுக்கான
மாதிரியாக இருங்கள். அறிவுரை சொல்வதை விடவும் அறிவுரைக்கான மாதிரியாக இருப்பது பல மடங்கு
வீரியத்துடன் அறிவுரையைச் சொல்வதைப் போன்றது.
*****
No comments:
Post a Comment