17 Sept 2022

கால இயந்திரத்திலேறி பாராட்டி விட்டு வருவேன்

கால இயந்திரத்திலேறி பாராட்டி விட்டு வருவேன்

முகத்தைப் பார்த்தால் பெயரும்

பெயரை நினைத்தால்முகமும்

மறந்து போகும் வியாதி எனக்கு

வாய்ஸ் காலில் பெயரைச் சொல்பவர்கள்

வீடியோ காலில் வந்து முகத்தையும்

வீடியோ காலில் முகம் காட்டுபவர்கள்

அப்படியே பெயரைச் சொன்னாலும் சரி

அல்லது வாய்ஸ் காலில் வந்து

பெயரைச் சொன்னாலும் சரி

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு

பெயரை எழுதி

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் ஒட்டி

பொங்கல் வாழ்த்து அனுப்பியிருக்கிறான் நண்பன்

என் வியாதியைப் புரிந்தவனைப் போல

சமீபத்தில் இந்த உண்மையைச் சொன்ன போது

அந்தப் போட்டோவில் இருப்பவனா இவன்

இவனா அந்தப் போட்டோவில் இருக்கிறான் என்று

மூளையின் இரண்டு பக்கமும் உடுக்கையடி

சந்தேகத்தைப் புரிந்து கொண்ட நண்பன்

ஆதார் கார்டிலிருக்கும் புகைப்படத்தைக் காட்டுகிறான்

அடடே பலே பலே அந்தக் காலத்துப்

புகைப்படக்காரர்கள் புகைப்படக்காரர்கள்தான்

எதிர்கால இயந்திரத்தில் ஏறி எப்படித்தான்

அந்தப் புகைப்படக்காரன்

ஆதார் கார்டில் அமையப் போவதைப் போல

அந்தக் காலத்திலேயே அப்படியொரு படம் எடுத்தானோ

எண்ணி எண்ணி வியக்கிறேன்

கால இயந்திரம் இருந்தால் ஏறிச் சென்று

அவன் கைவிரல்கள் பத்திற்கும்

அப்போதிருந்த தங்க விலையில்

மோதிரங்கள் வாங்கிப் போட்டு விட்டு

இந்தக் காலத்தில் நல்ல விலைக்கு விற்கலாம் என்று

இருபது முப்பது மோதிரங்கள் வாங்கி வருவேன்

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...