பாதுகாப்பால் ஆன உலகு
இதோ
டாஸ்மாக் கடை
சற்றுத்
தொலைவில்
சோதனையில்
ஈடுபட்டுக் கொண்டிருக்கும்
போக்குவரத்துக்
காவலர்
ஒவ்வொரு
முக்காய்க் கடக்கையில்
சிசிடிவி
கேமிராக்கள் கண்காணிக்க
குற்றங்கள்
நடந்து கொண்டிருக்கின்றன
விபத்துகளின்றி
வீடு வந்து சேர்கையில்
பாதுகாப்பாய்தான்
இருக்கிறார்கள்
வீட்டில்
இருக்கும் மனிதர்கள்
*****
மரணிப்பவர் எப்படியும் மரணிப்பார்!
தற்கொலை
செய்து கொள்வேன்
என மிரட்டிக்
கொண்டிருந்தவரைப்
போலிசிடம்
பிடித்துக் கொடுத்தோம்
அவர்
லாக் அப்பில் மரணித்திருந்தார்
*****
யாங்கும் வியாபித்திருக்க
உயர்
அலுவலர் ஒருவர் வந்து
அச்சுறுத்திப்
போனார்
சுத்தம்
சுகாதாரம் இல்லையென்றால்
தண்டனை
மற்றும் அபராதம்
அவர்
அலுவலம் போன போதும்
அப்படித்தான்
இருந்தது
கழிவறை
*****

No comments:
Post a Comment