மீண்டும் மீண்டும் வாழ்க்கை
இன்று
கண் விழிக்கிறேன்
அதே
விடியல்
அதே
சூரியன்
அதே
பறவைகளின் ஒலி
அதே
வீடு
அதே
தேநீர்
அதே
மனைவி
அதே
குழந்தைகள்
அதே
வேலை
அதே
அலைச்சல்
அதே
வீடு திரும்பல்
அதே
அசதி
அதே
தூக்கம்
அதே
கனவுகள்
அதே
விழிப்பு
மீண்டும்
அதே
அதே அதே
மீண்டும்
*****
திருப்தியில் வீழ்தல்
பறவை
பறந்து செல்கிறது
கிளை
அசைகிறது
மரத்துக்கு
வலிக்கவும் இல்லை
பறவைக்கும்
நன்றி சொல்ல தோன்றவில்லை
பறவை
வந்தால் தாங்குகிறது
இல்லையென்றால்
காற்றில் அசைகிறது
முறியும்
கிளைகள் குறித்த பிரக்ஞையின்றி
அடுத்தடுத்து
தளிர் விடுகிறது
ஒரு
நாள் வெட்டி வீழ்த்தப்படும் போது
பணிவுடன்
பூமியின் காலடியில் வீழ்கிறது
ஆயிரம்
விதைகளை அனுப்பி விட்ட திருப்தியில்
*****

No comments:
Post a Comment