31 Dec 2025

நன்றியும் வணக்கமும்

ஒரு சிறு துளியின் ஆவேசம்

காடு பற்றி எரிகிறது

சிறு வாளித் தண்ணீர் அழுகிறது

கடைசி தீப்பொறியை

அணைக்கும் ஆவேசத்துடன் காத்திருக்கிறது

ஒரு சொட்டு நீர்த்துளி

*****

நன்றியும் வணக்கமும்

கோழிக்குஞ்சுகளோடு

சாலையில் குறுக்கே புகுந்த

கோழிக்காக

இரு சக்கர வாகனத்தை நிறுத்திய

மனதுக்கு நன்றி சொன்னேன்

அதே காரணத்திற்காக

எதிரில் வந்த லாரியை நிறுத்திய

ஓட்டுநரைக் கைகுவித்து வணங்கினேன்

*****

கிப்ட் வவுச்சர்

கொடுத்த காசு மல்லிகைப்பூவுக்குத்தான்

தளும்பும் காதல்

மல்லிகைப் பூவுக்கான கிப்ட் வவுச்சர்

*****

ஆறுவது சினம்!

எப்போதாவதுதான் வருகிறது

ஏன் எப்போதும் வருவதில்லை

எனக் கோபித்துக் கொள்ள முடியாது

கவிதையிடமும் உன்னிடமும்

*****

No comments:

Post a Comment