26 Dec 2025

மனை முழுவதும் விளையாட்டு

மனை முழுவதும் விளையாட்டு

திடலில்

வயலில்

என

எங்கும் மட்டைப்பந்து

விளையாட முடியவில்லை

மறுநாளே

சதுர அடி நாற்பதே ரூபாய் என்று

பதாகைகளைத் தொங்குகின்றன

இப்போதெல்லாம்

பதாகைகள் தொங்கும்

வீட்டுமனைகளாய்ப் பார்த்து

விளையாடிக் கொண்டிருக்கிறோம்

*****

சரிபார்த்தல்

தொலைக்காட்சிகளை எண்ணினோம்

ஆறு இருந்தது

குடும்ப உறுப்பினர்களும்

சரியாக ஆறு இருந்தனர்

*****

ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை

வீட்டுக்குள் நுழைந்தால்

வேலையைக் கழட்டி வீசி விடுவேன்

இது மேலாளருக்குத் தெரியாது

வேலைக்குள் ஆழ்ந்தால்

வீட்டைக் கழட்டி வீசி விடுவேன்

இது மனைவிக்குத் தெரியாது

மதுபானக் கடைக்குள் நுழைந்தால்

என்னைக் கழட்டி வீசி விடுவேன்

இது எனக்கே தெரியாது

இந்தச் சந்தோசத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது

வாழ்க்கை

*****

No comments:

Post a Comment