குறைவதற்கு வாய்ப்பில்லாத பட்டியல் எப்படிக் குறையும்?
எப்போதும்
வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியாகும் போது வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும்.
இந்த
முறை அது நேர்மாறாக மாறியிருக்கிறது. வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
இதற்குக் காரணம் தீவிர வாக்காளர் திருத்தம்தான்.
வாக்காளர்
எண்ணிக்கை குறையுமா?
அதற்கு
வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு சாத்தியமாக வேண்டுமானால் மக்கள்தொகைப் பெருக்கம்
குறைய வேண்டும். இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே போவதால்,
ஒவ்வொரு வாக்காளர் திருத்தத்தின் போதும் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான்
போக வேண்டும்.
அதிலும்
ரொம்ப முக்கியமாக கடந்த சட்டமன்ற தேர்தலை விடவோ, நாடாளுமன்ற தேர்தலை விடவோ வாக்காளர்
எண்ணிக்கை குறையக் கூடாது. போகின்ற போக்கைப் பார்த்தால் எண்ணிக்கைக் குறைவுதான் ஏற்படும்
போலிருக்கிறது.
நீதித்துறையில்
ஒரு பிரபலமான வாசகம் சொல்லப்படுவதுண்டு. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு
நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது. இது தேர்தல் வாக்குரிமைக்கும் பொருந்தும்.
ஒரு நியாயமான வாக்காளர் தனது வாக்குரிமையை எக்காரணம் கொண்டும் இழந்து விடக் கூடாது.
அதற்கு தீவிர திருத்தங்கள் காரணமாகி விடவும் கூடாது.
ஏனிந்த
நிலை?
தீவிர
வாக்காளர் திருத்தத்திற்கு முன்பு வரை வாக்காளர்களைச் சேர்ப்பது தேர்தல் ஆணையத்தின்
கடமையாகவும், அதி முக்கியமான பணியாகவும் இருந்தது. தற்போது அந்தக் கடமையையும் பணியையும்
தேர்தல் ஆணையம் ஒவ்வொரு குடிமகன் தலையில் சுமத்துகிறது. ஒருவர் தன்னை வாக்காளர் என
நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நிரூபிக்க முடியாது போனால் நியாயமாக நீங்கள்
வாக்களிக்க தகுதியான வாக்காளராக இருந்தாலும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்
பெறாது. வாக்காளர் பட்டியலில் பெயரில்லை என்றால் அவர் எப்படி வாக்களிப்பார்?
தேர்தல்
ஆணையம் போன்ற ஜனநாயகத்தை வலுபடுத்தும் அமைப்புகளின் முக்கியமான நோக்கம் வாக்காளர்களைச்
சேர்ப்பதாக இருக்க வேண்டும், நீக்குவதாக இருக்கக் கூடாது.
நிலைமை
என்னவோ சேர்க்கை என்பதை விட, நீக்கத்தையே முதன்மையாகக் கொண்டுள்ளது போலத் தெரிகிறது.
*****

வணக்கம் ஐயா
ReplyDeleteஇறந்த வாக்காளர்கள்,
நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள்
நீண்ட காலமாக வசிக்காதவர்கள்
இரட்டைப் பதிவு உடைய வாக்காளர்கள்
ஆகியோர் வாக்குச்சாவடி முகவர்களின் ஒப்புதலோடு வாக்கு சாவடி நிலை அலுவலர்களால் நீக்கப்பட்டு இருக்கிறார்கள், தவறுதலாக வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தால் தற்போது படிவம் 6 வழங்கி சேர்த்துக்கொள்ள முடியும்.