கூடுதலும் குறைவும்
போன
வருடத்தை விட
இந்த
வருடம் அதிகம்தான்
கடனும்
வெயிலும்
மழையும்
பிக்கல்களும்
பிடுங்களும்
மன உளைச்சல்களும்
நரைத்த
முடியும்
என்றாலும்
வேடிக்கையும்
நக்கலும்
புன்முறுவலும்
போனால்
போகட்டும் போடாவும்
இது
இல்லையென்றால் இன்னொன்றும்
இன்றைக்கு
இல்லையென்றால் நாளையும்
படுத்தவுடன்
வரும் தூக்கமும்
போன
வருடத்தை விட
இன்னும்
கொஞ்சம்
அதிகம்தான்
இந்த
நடுத்தர இந்திய சாமானியனுக்கு
*****

No comments:
Post a Comment