12 Dec 2025

துரதிர்ஷ்டத்தின் சங்கிலி

துரதிர்ஷ்டத்தின் சங்கிலி

முத்தைத் திரு பத்தித் திருநகை

அத்திக்கிரை சத்திச் சரவண

எனக்கு மட்டும் பஞ்சாமிர்தம்

விடுபட்டு போய் விட்டதே முருகா

*

வார்த்தைகள் அற்று விட்டன

சொற்கள் சோர்ந்து விட்டன

வாக்கியங்களுக்கு இனி வேலையில்லை

எழுத்துகளே வேண்டாம் போ

ஒலிகள் அனைத்தும் ஓடிப் போ

எந்த நம்பிக்கையில்

இனி

என்ன பேச

நூறு ரூபாய் கடன் கொடுக்க

வக்கில்லாத உன்னிடம்

*

நல்ல கொழுப்பு உள்ள

ஆடுகளில் ஒன்றே

கறுப்பு ஆடாக இருக்கையில்

கெட்ட கொழுப்பு உள்ள ஒருவன்

எப்படி

அதிர்ஷ்டக்காரனாக….

*

உன் அன்புக்கு

நான் பொருந்த மாட்டேன்

விட்டு விடு

தாங்க முடியாத வன்மம்

*****

No comments:

Post a Comment