11 Jan 2022

மீளும் அதிர்ஷ்டம்

மீளும் அதிர்ஷ்டம்

பேருந்து நடத்துநரின் கையிலிருந்து

ஒரு ரூபாய் சில்லரைக்கு

இரண்டு ரூபாய் தவறி வந்து விடும் போது

அந்த நாளின் அதிர்ஷ்டத்தைக் குழைப்பதைப் போல

ஐந்து ரூபாய் சில்லரைக்குப் பதில்

ஒரு சாக்லேட்டை எடுத்து நீட்டி விடுகிறார்

கடைக்காரர் ஒருவர்

சட்டைப்பையில் நெடுநேரம்

சிறைபட்டிருக்கும் சாக்லேட்டை

சிறுமி ஒருத்தியைப் பார்க்கையில்

எடுத்து நீட்டும் போது

தொலைந்துப் போன

அற்றை நாளின் அதிர்ஷ்டம் மீள்வதென

தேவ கணங்களின் புன்னகையை

நீட்டி விட்டுப் போகிறாள் தேவதையைப் போல

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...