கடைசி வரை திருந்தாதவன்
பள்ளிக்கூடத்தில் விட்டால்தான்
திருந்துவான் என்றார்கள்
அவன் பள்ளிக்கூடத்தில் திருந்தவில்லை
ஜெயிலுக்குப் போனால்தான்
திருந்துவான் என்றார்கள்
அவன் ஜெயிலிலும் திருந்தவில்லை
கல்யாணம் பண்ணி வைத்தால்தான்
திருந்துவான் என்றார்கள்
அவன் கல்யாணம் பண்ணியும்
திருந்தவில்லை
ஒரு குழந்தை பிறந்தால் திருந்துவான்
என்றார்கள்
அவன் குழந்தை பிறந்தும் திருந்தவில்லை
ஐம்பது வயதானால் திருந்திடுவான்
என்றார்கள்
அவன் ஐம்பது ஆகியும் திருந்தவில்லை
இவனெல்லாம் கட்டையில் போகும்
போதுதான் திருந்துவான் என்றார்கள்
அவன் கட்டையில் போகும் போதும்
திருந்தவில்லை
அவனைக் கொலை செய்த வழக்கில்
ஐந்து பேர் கைதாகி உள்ளே
போனார்கள்
*****

No comments:
Post a Comment