ஆலுமா டோலுமாக்காரன்
குப்பைத்
தொட்டி கண்டபடி சிதறிக் கிடக்க
நான்கு
நாட்களுக்கு முன்பு செத்த பெருச்சாளி நாறிக் கிடக்க
தெருநாய்
அசிங்கம் செய்து வைத்த நாற்றம் பெருக்கெடுக்க
தோண்டி
வைத்த சாக்கடை மணமணக்க
ஓரத்தில்
பாலிதீனும் குப்பைகளும் எரிந்து புகை பரப்பிக் கொண்டிருக்க
முக்குத்
திரும்புகையில் சிறுநீர் வாடை சூழ்ந்து கொள்ள
வெட்டி
வைத்தக் குழிகள் பிதுக்கித் தள்ளிய மண்ணில்
சாலை
முழுவதும் சேறாகிக் கிடக்க
ஏகாந்தமாய்
நடந்து கொண்டிருக்கிறான்
பிச்சைக்கார
பைத்தியக்காரன் ஒருவன்
ஏகத்துக்கும்
சிரித்தபடி
அவ்வபோது
ஆலுமா டோலுமா எனக் கூவியபடி
*****

No comments:
Post a Comment