மழைபாடு!
யார்
சொன்னதைக் கேட்கிறார்கள்
என்
பேச்சுக்கென்ன மதிப்பு இருக்கிறது
இந்த
மழையே போ என்றாலும் போகாது
வா என்றாலும்
வராது
*
வெளியே
கிளம்பும் போது மட்டும்
மழை
வந்து விடக் கூடாது
பாவம்
மழையைத் திட்டித் தீர்த்து…
வீட்டுக்குள்
வந்த பிறகு
எவ்வளவு
வேண்டுமானாலும் பெய்யலாம்
வாழ்க
மழையென வாழ்த்தி…
ஆனால்
வீட்டுக்குள் வந்து விடக் கூடாது மழை
*
நல்ல
மழை
இனி
நல்ல புழுதி வர
நாளாகும்
*****

No comments:
Post a Comment