உலகின் ருசியான தேநீர்
தனக்கெனத்
தேநீர் போட்டுக் குடிக்க
அலுப்பாக
இருக்கிறது என்கிறார்
தேநீர்க்காரர்
பிளாஸ்கிலிருந்து
அதன் மூடியில் நிரப்பி
அதை
ஒரு கோப்பையாக்கி
அவர்
முன் நீட்டுகிறேன்
சற்றே
ஆறிய சாரம் குறைந்த தேநீரைச்
சுவைத்துப்
பருகுகிறார் தேநீர்க்காரர்
ஆகாவென
எழுந்தது தேநீர்ப் புரட்சி என்பதாக
புத்துணர்ச்சிப்
பெற்ற தேநீர்க்காரர்
எனக்கென
ஒரு கிளாஸ் தேநீரைத் தயாரித்துத் தருகிறார்
உலகத்தில்
எந்தத் தேநீருக்கும் இல்லாத ருசி
அந்தத்
தேநீரில் நிரம்புகிறது
*****
ஒத்த பீடி
ஒரு
பீடி போதும்
செவத்தையாவுக்கு
நாள்
முழுக்க பட்டினியோடு
வேலை
பார்க்க!
புற்றுநோய்
கண்டு
படுத்த
படுக்கையான பிறகு
கடைசி
ஆசையாக
செவத்தையா
கேட்டது
“மருந்து
மாத்திரையெல்லாம் வாணாம்
ஒத்த
பீடி கொடு போதும்
பிடிச்சிக்கிட்டேப்
போய் சேந்துடுறேன்!”
*****

No comments:
Post a Comment