13 Nov 2025

சிறைவாசி இயந்திரங்கள்

சிறைவாசி இயந்திரங்கள்

காற்று நுழையும் சன்னல்கள் இல்லாத வீடுகள்

குளிர்சாதன வசதிகளின் குளுமையில்

நச்சுக் காற்றை வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன

குப்பைகள் உரமாகும் குப்பைக் குழிகள் இல்லாத வீடுகள்

வீதியோரக் குப்பைத் தொட்டிகளில்

பாலிதீன்களையும் பிளாஸ்டிகளையும் நிரப்பிக் கொண்டிருக்கின்றன

ஆடு மாடுகளின் சத்தங்கள் இல்லாத வீடுகள்

பாக்கெட் பாலைப் பருகியபடி

தொலைக்காட்சி சத்தங்களைக் கசிய விடுகின்றன

அமர்ந்து பேசும் திண்ணைகள் இல்லாத வீடுகள்

முன்வாசலில் வணிக வளாகங்களை பரப்பி வைத்து

பேரம் பேசிக் கொண்டிருக்கின்றன

வீடுகள் ரொம்ப மாறி விட்டன என

சலித்துக் கொள்ள கூட நேரமில்லாது

கூடு அடைவதும் தொலைவதும் என்று

செக்கில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்

இயந்திரங்கள் ஆகி விட்ட வீட்டுச் சிறைவாசிகள்

*****

No comments:

Post a Comment