தெய்வமாக இருத்தல்
உங்கள்
பயம்
உங்கள்
மிருகத்தைத் தட்டி எழுப்பும்
உங்கள்
தைரியம்
எந்த
மிருகத்தையும் அடக்கி ஆளும்
உங்களுக்குள்
இருக்கும் மிருகத்தை உட்பட
நீங்கள்
மிருகத்தைத் தட்டி எழுப்பப் போகிறீர்களா
அடக்கி
ஆளப் போகிறீர்களா
அச்சப்படுவது
எளிது
தைரியமாக
இருப்பது கடினம்
அச்சம்
ஒட்டிக் கொள்ளும்
தைரியம்
தைரியமாக இருப்பதும் அல்ல
அச்சப்படாமல்
இருப்பது மட்டுமே
அச்சத்தை
விரட்டினால் தைரியம் அங்கே இருக்கும்
தைரியத்தின்
தோற்றம் கோழைத்தனம்
பேயாவதோ
பிசாசாவதோ மிருகமாவதோ பெரிய காரியமில்லை
எதுவும்
ஆகாமல் இருப்பின்
தெய்வமாக
இருப்பீர்கள்
ஆகாமல்
இருப்பது முக்கியம்
ஆகுதல்
தெய்வத்திற்கு எதிரானது
நீங்கள்
தெய்வமாகவே இருப்பதால்
எதுவும்
ஆகாமல்
நீங்கள்
நீங்களாக இருப்பின்
அச்சப்பட
மாட்டீர்கள்
பேயாக
மாட்டீர்கள்
பிசாசாக
மாட்டீர்கள்
மிருகமாக
மாட்டீர்கள்
தெய்வமாகவே
இருப்பீர்கள்
*****

No comments:
Post a Comment